14 Feb 2016

துறைநீலாவணை கண்ணகியம்மன் ஆலயத்தில் நாகதம்பிரான் ஆலயத்திற்கு புதிய கட்டிடம் அமைப்பதற்கு அடிக்கல் நாட்டிவைப்பு

SHARE
(க.விஜி)

வரலாற்றுச் சிறப்புமிக்கதும் பலஆண்டுகள் மிகவும் பழைமையுள்ளதுமானதும் தெய்வீகசக்தியுடன் மக்களிடம் உன்னதமாக பேசப்படும் துறைநீலாவணை கண்ணகி ஆலயத்தில் நாகதம்பிரான் ஆலயத்திற்கு புதிய கட்டிடம் அமைப்பதற்கு அடிக்கல் வெள்ளிக்கிழமை (12)  நாட்டிவைக்கப்பட்டது.
துறைநீலாவணை கண்ணகியம்மன் ஆலயத்தின் வண்ணக்கர் கி.விஜயகுமார் தலைமையில் நடைபெற்ற  இந்த சமயசம்பிராய நிகழ்வில் பூகர்களான செ.தருமரெத்தினம் யமுனாகரன் முன்னாள் வண்ணக்கர்களான சீ.அமரசிங்கம்nசோ.மயில்வாகனம்nகிராமசேவையாளர்களான கனகசபை தி.கோகுலராஜ் ஆலயபரிபாலன சபையின் செயலாளர் பு.திவிதரன் பொருளாளர் கேதாரம் வித்தியானந்தன் துறைநீலாவணை கண்ணகி கலைக் கழகத்தினர் உட்பட பலர் கலந்து கொண்டனர்


பொதுமக்களின் பங்களிப்புடன் இக்கட்டட நிருமாணம் அமையப்பெறவுள்ளது

இவ்வாலயத்தில் அம்பாளின் உருவச்சிலைகளையும் தங்க ஆபரணங்களையும் கூரைப்பாய் பிடித்து  தோணியில் வந்த திருடர்களால் சுமார் 80 வருடங்களுக்கு முன்னர் ஆலயவளாகத்தில் கள்வர்கள் நுழைந்து அங்கிருந்த மேற்கூறப்பட்ட அம்பாளின் உடைமைகளை அபகரித்து கூரைப்பாய் தோணியில் எடுத்து கொண்டு போனபோது ஆலயத்தில் புடைசூழ்ந்துள்ள நாகபாம்புகள் அவர்களை துரத்திக்கொத்தி திருடர்களை நிர்க்கதியாக்கப்பட்டதாக இவ்வாலய வரலாறு கூறுகின்றது. 








SHARE

Author: verified_user

0 Comments: