12 Feb 2016

திறம்பட நடைபெற்ற களுதாவளை மகாவித்தியாலயத்தின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டி

SHARE
மட்.களுதாவளை மகாவித்தியாலயத்தின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டி வெள்ளிக் கிழமை (12) மாலை வித்தியாலய விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.
இங்கு நடைபெற்ற விளையாட்டுக்கள், மற்றும், உடற்பயிற்சி கண்காட்சி, அணிநடை, இல்ல சோடனை மற்றும் வடிவமைப்புகள், போன்றன யாவும், நவீனத்துமான முறையிலும், தேசிய ரீதியில் நடைபெறும் விளையாட்டு நிகழ்வுகளுக்கு ஒப்பான முறையில் முக்கியத்துவம் வாந்தவையாகக்  காணப்பட்டதையும், அவதானிக்க முடிந்தது.

வித்தியாலய அதிபர் எஸ்.அலோஸியஸ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ஜே.எஸ்.டி.எம்.அசங்க அபேயவர்த்தன, கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் கருணாகரன், கிழக்கு மாகாண விவசாய அமைச்சின் செயலாளர் சிவநாதன், மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலாளர் கலாநிதி. எம்.கோபாலரெத்தினம், பட்டிருப்புக் கல்வி வலய பிரதிக்கல்விப் பணிப்பாளர்களான, எஸ்.ஞானராசா, வி.திரவியராசா, கிழக்குப் பல்கலைக் கழகத்தின் பதில் பதிவாளர் ஏ.பகிரதன்,  உட்பட  மாணவர்கள், பெற்றோர்கள், கல்வி அதிகாரிகள், பழைய மாணவர்கள், என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

மூன்று இல்லங்களுக்கிடையில் நடைபெற்ற இவ்விளையாட்டுப் போட்டியில் விபுலானந்தா இல்லலம் 667 புள்ளிகளைப் பெற்று முதலாம் இடத்தையும், பாரதி இல்லம் 591 புள்ளிகளைப் பெற்று இரண்டாம் இடத்தையும், நாவலர் இல்லம் 503 புள்ளிகளைப் பெற்று மூன்றாம் இடத்தையும், பெற்றுக் கொண்டது.

இத்தில் வெற்றிபெற்ற வீர வீராங்கணைகளுக்கு, அதிதிகளால் வெற்றிக் கேடையங்கள் வழங்கப்பட்டு பாராட்டப்பட்டமை குறிப்பிடத் தக்கதாகும்.




















































SHARE

Author: verified_user

0 Comments: