29 Feb 2016

தமிழர், முஸ்லிங்கள் என்று வேற்றுமை காட்டி அரசியல் செய்பவர்கள் எல்லாம் எதிர்வரும் காலங்களில் தேர்தலில் மக்களால் தோற்கடிக்கப் படுவார்கள்.

SHARE
முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த நான் இப்பிரதேச அபிவிருத்திக்குழு தலைவராக வந்திருப்பதானது தமிழ் மக்கழுடைய அபிவிருத்திகள் இல்லாமல் செய்வதற்கான ஒரு செயற்பாடாகும் என தமிழ அரசியல்வாதி ஒருவர் அண்மையில் தெரிவித்துள்ளார். இது ஒரு அசிங்கமான அரசியல் செயற்பாடாகும். இந்நிலையில்தான் நாங்களும், அரசியலுக்குள் அகப்பட்டுக் கொள்டுள்ளோம் என்பது வேதனையான விடையமாகும்.


என கிராமிய பொருளாதார அபிவிருத்திப் பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீரலி தெரிவித்துள்ளார். இரண்டு மில்லியன் ரூபாய் செலவில் மட்டக்களப்பு பட்டிருப்பில் நிருமாணிக்கப்பட்ட பாலர் பாடசாலைக் கட்டடத்தை இன்று ஞாயிற்றுக் கிழமை (28) திறந்து வைத்து உரையாற்றுகையிலே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்…

தழிழ் முஸ்லிம், கிராமங்களுக்கு அப்பால் ஐக்கிய தேசியக் கட்சியின் பட்டிருப்புத் தொகுதி அமைப்பாளரின் வேண்டுகோளின் அடிப்படையில் நாங்கள் இந்த பட்டிருப்பு தொகுதியில்தான் கிழக்கில் முhலாவது சதொச நிலையத்தை திறந்து வைத்துள்ளோம். 

எனவே இனிமேலும், தமிழர், முஸ்லிங்கள் என்று வேற்றுமை காட்டி அரசியல் செய்பவர்கள் எல்லாம் எதிர் வரும் காலங்களில் தேர்தலில் மக்களால் தோற்கடிக்கப்பட்டு மக்களின் மதிப்பை இழந்து விடுவார்கள். 

இந்த மாவட்டத்திலே தமிழர்கள், முஸ்லிங்கள், சிங்களவர்கள், என்ற பேதங்கள் மறந்து அனைவருக்கும் அனைத்து அபிவிருத்திகளும் கிடைக்க வேண்டும் என்ற நோக்குடன் எமது நல்லாட்சி அரசாங்கம் நகர்ந்து கொண்டிருக்கின்றது.  இந்நிலையில் சாதி, மத பேதங்களுக்கு அப்பாலிருந்து சேவை செய்யும் எம்மைப்பார்த்து ஒரு சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் பேசிக் கொண்டிருப்பதானது அசிங்கத்தையும், அருவருப்பையும் தரும் செயலாக இருக்கின்றது. 

மட்டக்களப்பிலே உள்ள சில அதிகாரிகளை அமைச்சர் அமீரலி பந்தாடுவதாக அண்மையில் ஒரு இணையத்தளம் செய்தி வெளியிட்டிருந்தது. இவ்வாறு தெட்டத்தெழிவாக எழுத்தக்கூடிய ஊடகவியலாளர்கள் யாராக இருந்தாலும் எம்முடன் நேரில் வந்தால் அவ்வாறான அதிகாரிகளின் விபரங்களை நாம் விரித்துக்காட்டுவோம்.

அரசாங்க அதிகாரிகள் மக்களின் துயர் துடைப்பவார்களாக அல்லாமல், மண் வியாபாரம் செய்வதற்கும், மாட்டு வியாபாரம் செய்வதற்கும், வந்தவர்களாக இருக்கக்கூடாது என்பதில் நான் மிகவும் தெழிவுடன் செயற்பட்டு வருகின்றேன். மக்களின் வரிப்பணத்தில் சம்மபளம் பெற்று மக்களுக்குச்சேவை செய்ய வேண்டிய அதிகாரிகள், மக்களைத் துவம்சம் செய்து பேதமை காட்டி, அரசியல் வாதிகளிடத்தில் வேறுபாடு காட்டி செயற்படக்கூடாது.

இந்த மாவட்டத்திலே பாதிக்கப்பட்டவர் ஒரு முஸ்லிமா அல்லது தமிழரா என்பது கிடையாது பாதிக்கப் பட்டவர்களுக்கு நிவாரணம் வேண்டும் என்பதில் உறுதியுடன் செயற்படுபவர்கள் நாங்கள். மாவட்டத்திலே உள்ள அனைத்துப் பிரச்சனைகளையும், அதிகாரிகள் எம்மிடம் பேசலாம். எனவே வெளிநாடுகளிலே உள்ள இணையத்தளங்களில் எம்மைப்பற்றி  எழுதுவதால் எமக்கு ஒன்றும் ஆகப்போவது கிடையாது.

எனவே எதிர் காலத்தில் இப்பிரதேசத்தின் அபிவிருத்திக் குழுத் தலைவராக இருந்து இப்பிரதேச மக்களுக்கு என்ன, என்ன தேவைகள் உள்ளன என்பதையெல்லாம் அறிந்து அவைகளை நிவர்த்தி செய்ய திட்டமிட்டுள்ளோம். என அவர்  தெரிவித்தார்.

SHARE

Author: verified_user

0 Comments: