24 Feb 2016

மொழிக்காக உயிர் திறந்தவர்களை நினைவு கூறுமுகமாகவே சர்வதேச மொழித் தினமாக பெப்ரவரி 21ஆம் திகதியை ஐ.நா பிரகடனப்படுத்தியது -.

SHARE

உலக தாய்மொழி தினம் ஒவ்வொரு வருடமும் பெப்ரவரி 21ஆம் திகதி சர்வதேச மொழி தினமாக கொண்டாடப்பட்டு வருகின்றது. இதற்கு மூல காரணம் பங்களதேஸில் பங்காள மொழியை பேச விடாமல் பாக்கிஸ்தான் தடை விதித்தன் காரணமாகும். இதற்காக போராடிய 4 பங்காளியா்  சுட்டுக் கொல்லப்பட்டனா்.  அதன் பிறகு 1972ஆம் ஆண்டு இந்தியா இரானுவம் உதபியதன் காரணமாகவே பாக்கிஸ்தானில் இருந்து பங்களாதேஸ் தனியானதொரு நாடாகியது. அப்போது ஜக்கிய நாடுகள் மற்றும் யுணஸ்கோ மொழிக்காக உயிர் திறந்தவர்களை 4 பங்களாதேசிகளை  நினைவு கூறுமுகமாகவே  சர்வதேச மொழித் தினமாக பெப்றவரி 21ஆம் திகதியை ஜக்கிய நாடுகள் பிரகடனப்படுத்தியது.  என கல்வி இராஜாங்க அமைச்சா் இராத கிருஸ்னன்  அங்கு  தெரிவித்தாா்.

கொழும்பு டி.எஸ். சேனாநாயக்க கல்லுாாியில் நேற்று (23)ஆம் திகதி உலக தாய் மொழி தினத்தினை முன்னிட்டு தமிழ்ப்பிரிவு மாணவா்கள் ஆசிரியா்கள் பிரதி அதிபா்கள் இணைந்து இந் தினத்தினை கல்லுாாி அதிபா் ஆர்.எம் ரத்நாயக்க தலைமையில் கொண்டாடியது.
 இந் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கல்வி இராஜாங்க அமைச்சா் இராதக்கிருஸ்னன், கல்வியமைச்சின் பிரதிப் பணிப்பாளா் திருமதி ஜீ. சடகோபன் மற்றும் கொழும்பு சக பாடசாலைகளின் அதிபா்கள் மாணவா்களும்  கலந்து சிறப்பித்தனா்.

இந் நிகழ்வின் போது பாடசாலை மாணவா்களது கலை கலாச்சார  நிகழ்வுகள் மேடை ஏற்றப்பட்டன, மொழி தினபோட்டிகளில்  வெற்றி பெற்ற மாணவா்களுக்கு சான்றிதழ்களும் பிரதம அதிதியினால் வழங்கி வைக்கப்பட்டது.

அங்கு தொடா்ந்து உரையாற்றிய கல்வி இராஜாங்க அமைச்சா் 

உலகில் 2500 க்கும் மேற்பட்ட மொழிகள் பேச்சி வழக்கில் உள்ளன. அதில் பழம் பெறும்  மொழிகளாக  கிரேக்கம், லத்தீன், ரோம்,சீன, சமகிருஸ்தம், ஆங்கிலம் ஆகிய  மொழிகளில் உள்ளன. இவ் மொழிகளில் இருந்தே ஏனைய  மொழிகள் உருவாகியது. அதில் தமிழ் மொழியும் பழமை வாய்ந்த தொரு மொழியாகும் உலகில் 10 கோடிப்  பேர்  தமிழ் மொழியைத்  தாய்மொழியாகக் கொண்டவா்கள் உள்ளனா். அதில் 7 கோடி இந்தியாவிலும் ஏனைய 3 கோடிப் பேர்  உலகில் பல பாகங்களிலும் வாழ்ந்து வருகின்றனா். ஆகவே தமிழ் மொழிக்கு உலகில் அந்தஸ்த்து உள்ளது.

 எமது நாட்டிலும் தமிழ், சிங்கள மொழிகள் அரச கருமாற்றக் கூடிய மொழியாக உள்ளது.  தமிழ்  மொழியிலும் கருமம் ஆற்றக் கூடியவாரே சட்டத்தில் உள்ளது. இருந்தும் இதுவரை  பூரணமாக எமது மொழி கருமமாற்றப்படுகின்றதா ? என்பது இன்னும் சந்தேகமாகவே இருந்து வருகின்றது. தமிழா்களுக்கும் தமிழ் பண்பாட்டு கலை கலாச்சார விழுமியங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படல் வேண்டும்.

புதிய அரசின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா, பிரதமா் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஆட்சிக் காலத்தில் 1948ஆம் ஆண்டுக்கு பிறகு 2016 பெப்ரவறி 4ஆம் திகதியே தமிழ் மொழியில் தேசிய கீதம் பாடப்பட்டது. இந்த அரசு தமிழா் ஒருவரை எதிா்கட்சித் தலைவராக்கிஉளளது. அதே போன்று தமிழா் ஒருவரை கல்வி இராஜாங்க அமைச்சராக்கியுள்ளது. இதுவெல்லாம் இந்த அரசின் தமிழுக்கு கொடுக்கும் முக்கியத்துவமாகும். அதே போன்று புதிய அதிபராக கொழும்பு டி.எஸ்.சேனாநாய்க்கா கல்லுாாிக்கு 2 மாதத்திற்குள் வந்த ரத்தனாய்க்க அவா்கள்  இந்தக் கல்லுாாியில் தமிழ் மொழிப் பிரிவின் ஊடாக தாய் மொழி தினத்தினை கொண்டாடுவதை நாம் கல்வி இராஜாங்க அமைச்சா் என்ற ரீதியில் அவரை நாம் பாராட்டக் கடமைப்பட்டுள்ளேன். என கல்விஇராஜாங்க அமைச்சா் அங்கு உரையாற்றினாா்.






SHARE

Author: verified_user

0 Comments: