22 Feb 2016

2016 ஆம் ஆண்டில் கல்வி பொதுத்தர சாதாரண தரத்திற்குத் தோற்றவிருக்கும் மாணவர்களுக்கு இலவச கல்விக் கருத்தரங்கு.

SHARE
2016 ஆம் ஆண்டில் கல்வி பொதுத்தர சாதாரண தரத்திற்குத் தோற்றவிருக்கும் மாணவர்களிற்குரிய இலவசகல்விக் கருத்தரங்கு ஞாயிற்றுக் கிழமை (21)  மட்.வெல்லாவெளி கலைமகள் வித்தியாலயத்தில் நடைபெற்றது.
கிழக்கின் இளைஞர் முன்னணியின் கல்வியில் புரட்சி செய்து எம்தமிழ் சமூகத்தின் நிலையினை உயர்த்திடுவோம் எனும்  தொனிப்பொருளின் கீழ் இவ்விலவசக் கல்விக் கருத்தரங்கு நடைபெற்றது.

கிழக்கின் இளைஞர் முன்னணியின் தலைவர் கணேசமூர்த்தி கோபிநாத்தின் திட்டமிடலுக்கு அமைய மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவான்கரைப் பிரதேசங்களில் காணப்படும் மாணவர்களின் கணிதப்பாட அடைவு மட்டத்தை உயர்த்தும் நோக்கில் இவ்விலவசக் கல்விக் கருத்தரங்கு நடைபெற்றது. 

இதன்போது களுவாஞ்சிகுடியினைச் சேர்ந்த பிரபலகணித ஆசிரியரும் ஓய்வுபெற்ற ஆசிரிய ஆலோசகருமான கணிதக்கனி க.கிருஸ்ணபிள்ளை ஆசிரியர் வளவாளராகக் கலந்து கொண்டு மாணவர்களுக்கு விளக்கங்களை வழங்கினார்.

இக்கருத்தரங்கில் படுவான்கரைப் பிரதேசத்திலுள்ள பலபாடசாலைகளில் இருந்தும் 200 இற்கு மேற்பட்ட மாணவர்கள் பங்குபற்றியிருந்தனர். 

இப்பிரதேச மாணவர்களின் நன்மைகருதி, விஞ்ஞானம், தமிழ், ஆங்கிலம், ஆகிய பாடங்களுக்குமுரிய இலவச கருத்தரங்குகளும்? அடுத்த வாரமிருந்து நடாத்த திட்டமிடப் பட்டுள்ளதாக  கிழக்கின் இளைஞர் முன்னணியின் தலைவர் காணேசமூர்த்தி கோபிநாத் இதன்போது தெரிவித்தார்.













SHARE

Author: verified_user

0 Comments: