போரதீவுப்பற்று பிரதேசம் பூர்வீகமான தமிழ் மக்களின் பிரதேசமாகும், அண்மையில் இப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட தொல்பொருள் ஆயிவின் பிரகாரம், கடந்த 2000 ஆண்டுகளுக்கு முன்னர் இப்பகுதியில் தமிழர்கள் வாழ்ந்ததற்குரிய கல்வெட்டுச் சான்றுகளும், தமிழ் பிராமிய எழுத்துக்கள் பொறிக்க்படப்பட்ட கல்வெட்டுக்களும், சான்றாக அமைந்துள்ளன. எனவேதான் இப்பிரதேசம்
பூர்வீக தமிழ் பிரதேசமாகும்.
என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
கலாசார அமைச்சின் 157 லெட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப்பற்று பிரதேச செயலாகத்திற்குட்பட்ட வெல்லாவெளியில் அமைக்கப்பட்ட கலாசார மத்திய நிலையத்தை செவ்வாய்க் கிழமை(16) திறந்து வைக்கப்பட்டது. இதில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் குறிப்பிடுகையில்…..
1833 ஆம் ஆண்டுக்கு முன்னர் கோல்புறுக்கமரன் சீர்திருத்தம் வருவதற்கு முன்னர், வடக்கு கிழக்கு தமிழ் பிரிவும், கண்டி இராச்சியமும், கரையோர இராச்சியமும்தான் இந்த நாட்டிலே 3 பிரிவுகளாகக் காணப்பட்டிருந்தன.
கண்டி இராச்சியத்தை அன்னியர்கள்; கைப்பற்ற முனைந்தபோது கண்டி இராச்சியத்தைக் காப்பாற்ற படைககளை அனுப்பி வைத்த இடத் இப்போரதிவுப் பற்றுப் பிரதேசமாகும், இதற்குரிய சான்றுகளும், இருக்கின்றன. இப்பகுதியிலே அமைந்துள்ள திருப்பழுகாமம் எனும் ஊரிலிருந்துதான் கண்டி இராச்சிய மன்னனின் பாதுகாப்பிற்காக குதிரைப்படைகளையும், யானைப்படைகளையும். அக்காலத்தில் அனுப்பி வைத்திருந்துள்ளார்கள். இப்பிரதேசம் தமிழழ்களின் பூர்வீக கலாசாரங்கள் பின்பற்றப்பட்டு வந்த தமிழ் சிற்றரசர்கள் வாழ்ந்து வந்த இடமாகும்.
1949 ஆம் ஆண்டுக்குப் பின்னர் கல்லேயா குடியோற்றங்கள் ஏற்படுத்தப்பட்டதன் பின்னர் சில வித்தியாசங்கள் ஏற்படுத்தப்பட்டன. எனவே இங்குள்ள தமிழ் மக்களின் கலை கலாசாரங்கள் மேம்படுத்த்தப்பட வேண்டும், பாதுகாக்கப்பட வேண்டும்.
இந்த நாட்டின் தற்போதைய அரசாதங்கத்தைக் கொண்டு வந்த பங்காளிகள் தமிழர்கள். ஆட்சி மாற்றத்திற்காக பெருவாரியாகக் கஸ்ற்றப்பட்டது தமிழினமாகும். எனவே இந்த ஆட்சி மாற்றத்தில் வந்த அமைச்சர் எஸ்.பி.நாவின்ன தமிழர்களைப் புறந்தள்ளாத வகையில், வடகிழக்கு மண்ணில் பல லேலைத் திட்டங்களை மேற்கொள்ள வேண்டும்.
கடந்த யுத்த சூழலால் பாதிக்கப்பட்டுப் போயுள்ள எமது வடகிழக்குப் பகுதியில் கலை, கலாசார விழுமியங்களை மேலோங்கச் செய்ய வேண்டிய தேவை உள்ளது. ஒவ்வொரு பகுதிக்கும் கலாசார மத்திய நிலையங்கள் தேவையாகவுள்ளது. எனவே கலாசாரத்திற்குப் பெறுப்பான அமைச்சர் எஸ்.பி.நாவின்ன ஏனைய பகுதிகளுக்கும், கலாசார மத்திய நிலையங்களை அமைத்து, அவற்றுக்குரிய உபகரணங்களையும், வழங்க வேண்டும். எமது மக்களுக்கு உதவும் அமைச்சின் நல்ல விடையங்களுக்கு நாம் ஆதரவு வழங்குவோம். என அவர் தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment