12 Feb 2016

கடந்த ஆயுதப் போராட்டத்திலே 140000 பேர் காணாமல் ஆக்கப்பட்டு கொன்றொழிக்கப்பட்டுள்ளார்கள் - கருணாகரம் (வீடியோ)

SHARE
கடந்த ஆயுதப் போராட்டத்திலே 140000 பேர் காணாமல் ஆக்கப்பட்டு கொன்றொழிக்கப் பட்டுள்ளார்கள். இந்த 140000 பேரும் அரசாங்கம் கூறுவது போன்று, பயங்கரவாதிகளாக இருந்திருந்தார்  இந்த நாடு இப்போது இரண்டாகப் பிளவு பட்டிருக்கும். மாறாக இவர்கள் அனைவரும் அப்பாவித் தமிழ் மக்களே! தவிர வேறு யாரும் இல்லை. என்பதை கோட்டாபாய ராஜபக்ஸ தெரிந்து கொள்ள வேண்டும். என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், தற்போதைய கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான கோ.கருணாகரம் (ஜனா) தெரிவித்துள்ளார்.
மட்.மகிழூர் சரஸ்வதி மகாவித்தியாலயத்தின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டி வியாழக் கிழமை (11) மாலை மகிழூர் பொது விளையாட்டு மைதானத்தில்  வித்தியாலய அதிபர் என்.புட்பமூர்த்தி தலைமையில் நடைபெற்றது 

இதன்போது கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதில் அவர் மேலும் குறிப்பிடுகையில்…

கடந்த காலங்களில் எமது மக்களுக்கு ஏற்பட்ட பாதிப்புக்கள் தொட்பில் அரசியல் வாதிகளைவிட மக்கள் நன்கு அறிந்துள்ளார்கள். எமது மக்களுக்கு கடந்த காலங்களில் ஏற்பட்ட இழப்புக்களை மீழக்கட்டியெழுப்ப வேண்டுhக இருந்தால் எமது வருங்கால கல்விச் சமூகத்தைக் கட்டியெழுப்ப வேண்டும்.  

இந்நாட்டில் கடந்த காலங்களில் ஏற்பட்டடிருந்த ஆயுதப் போராட்டம் 2009 மே 18 இல் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டவேளை இருந்த அரசாங்கத்தி; ஆட்சி 2015 ஜனவரி 8 ஆம் திகதி மாற்றப்பட்டு புதிய ஆட்சி ஏற்படுத்தப் பட்டுள்ளது. தற்போது ஏற்பட்டுள்ள புதிய அரசாதங்கத்தின் ஆட்சியில் எமது தமிழ் மக்களுக்குரிய நிரந்தர அரசில் தீர்வு கிடைக்கும் என்ற எண்ணப்பாடு நிலவுகின்றது. 

2009 ஆம் ஆண்டு போர் முடிவுற்றபோது காணாமல் போனவர்கள் எவரும் இல்லை மாறாக பயங்கரவாதத்துடன் சம்மந்தப்பட்டவர்கள் அழிக்கப்பட்டுள்ளார்கள் என முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபாய ராஜக்ஸ பகிரங்கமாக ஊடகங்களில் தெரிவித்துள்ளார். வெள்ளைக் கொடியுடன் வந்த ஆயிரக்கணக்கான போராளிகள் எங்கே? உறவினர்களின் கண்முன்னே பஸ்களில் ஏற்றிச் செல்லப்பட்ட, அப்பாவித்தமிழ் மக்கள் எங்கே? 

கடந்த ஆயுதப் போராட்டத்திலே 140000 பேர் காணாமல் ஆக்கப்பட்டு கொன்றொழிக்கப் பட்டுள்ளார்கள். இந்த 140000 பேரும் அரசாங்கம் கூறுவது போன்று, பயங்கரவாதிகளாக இருந்திருந்தார்  இந்த நாடு இப்போது இரண்டாகப் பிளவு பட்டிருக்கும். மாறாக இவர்கள் அனைவரும் அப்பாவித் தமிழ் மக்களே! தவிர வேறு யாரும் இல்லை. என்பதை கோட்டாபாய ராஜபக்ஸ தெரிந்து கொள்ள வேண்டும்.

புரையோடிப்போயுள்ள எமது இனப்பிரச்சனைக்கு இந்த ஆண்டு இறுதிக்குள் ஓர் தீர்வு வரும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்மந்தன் தெரிவித்திருக்கின்றார்.  இணைந்த வடகிழக்கிலே முஸ்லிங்களுக்கு ஒரு அலகுடன் ஓர் தீர்வு வரவேண்டும் என்பதையே நாமும் எதிர் பார்திருக்கின்றோம்.

13 வது திருத்தச் சட்டத்திலே இருக்கின்ற அதிகாரங்கள் பயன்படுத்தப் படாமலும், பயன்படுத்த முடியாமலுமுள்ளது. இதனைவிட மாகாணசபையில் எடுக்கப்படுகின்ற தீர்மானத்திற்கு பின்னர் கையொப்பமிடும் அதிகாரம் மாகாண ஆளுனருக்கு உள்ளது. இது நீக்கப்படல் வேண்டும், ஒற்றை ஆட்சி என்ற கதை இருக்கக்கூடாது.

இந்த நாட்டிலே மீண்டும் ஒரு ஆயுதப்பாராட்டம் வரக்கூடாது என்றால் இந்த நாட்டில் சமஸ்ட்டி ஆட்சி தேவை, இந்த சமஸ்டி ஆட்சி கிடைக்கும் வரை தமிழ் தேசியக் கூட்டமைப்பு தொடர்ந்து போராடிக் கொண்டுதான் இருக்கும். எனவே எமக்குரிய சமஸ்ட்டி ஆட்சி வரும்வரைக்கும் தமிழ் மக்கள் அணைவரும் ஒரு குடையின் கீழ் பயணிக்க வேண்டும். 

ஆனால் தற்போது தமிழ் மக்களின் கிராமங்களுக்குள் சில கோடரிக்காம்புகள் அது தருவேம், இது தருவேம், என்று பசப்பு வார்த்தைகளைத் தெரிவித்து எமது மக்களைக் குழப்பும் செயற்பாடுகளிலும், ஈடுபட்டு வருகின்றார்கள். இவ்வாறானவர்களை எமது மக்கள் நிதானமாகக் கையாள வேண்டும். என அவர் தெரிவித்தார்.
SHARE

Author: verified_user

0 Comments: