14 Feb 2016

மட்டக்களப்பில் 1000 இடங்களில் டெங்கு பரிசோதனை

SHARE

ஜனாதிபதி செயலகத்தின் டெங்கு ஒழிப்பு பணியகமும், சுகாதார அமைச்சும் இணைந்து மட்டக்களப்பு மாநகர சபை பிரதேசத்தில் 1000 இடங்களில் டெங்கு பரிசோதனை மேற்கௌ்ளப்பட்டதாக கல்லடி பிரதேச பொது சுகாதார பரிசோதகர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்தார். கல்லடி மற்றும் நாவற்குடா பிரதேசங்களில் கடற்படை மற்றும் பொலிஸாரின் ஒத்துழைப்புடன் மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையினால் டாக்டர் திருமதி அச்சுதனின் மேற்பார்வையில் 20 குழுக்களாக பிரிக்கப்பட்டு இச்சோதனை நடவக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. 

கல்லடி இராணுவ தலைமையகம், பொலிஸ் நிலையம் உட்பட அரச அலுவலகங்கள், வீடுகள் உள்ளடங்கலாக 1000 இடங்கள் இத்திட்டத்தின்கீழ் சோதனையிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 

பல இடங்களில் டெங்கு குடம்பிகள் கண்டு பிடிக்கப்பட்டு அவர்கள் மீது வழக்குத் தொடரப்பட்டுள்ளதுடன் பலர் எச்சரிக்கையும் செய்யப்பட்டனர்.(ad) 

SHARE

Author: verified_user

0 Comments: