24 Feb 2016

கொழும்பு 10 மருதானையில் தன்னகத்தே தலை நிமிா்ந்து நிற்கின்றது.

SHARE
(அஷ்ரப் ஏ சமத்)

கொழும்பு 10 மருதானையில் தன்னகத்தே தலை நிமிா்ந்து நிற்கின்றது. அல்- ஹிதாயா பாடசாலை இதற்கு முக்கிய காரணம் இரு வருடங்களுக்கு முன் இப்பாடசாலையைப் பொறுப்பேற்ற கல்லுாாி  அதிபா் திருமதி ஸாஹீா் அதிபா் அவா்களாவா்.  இப் பாடசாலையை பற்றி இக் கல்லுாரியின் பெற்றாா்கள் எழுதியுள்ள கடிதத்தில் தெரிவிக்கையில் கொழும்பில் தலைநகரின் 2000 மாணவா்களுக்கு  ஒரு பாடசாலை இருத்தல் வேண்டும். ஆனால் கொழும்பில் 10ஆயிரம் முஸ்லீம் மாணவா்களுக்கு ஒரு பாடசாலை என்ற ரீதியிலேயே உள்ளது. தலைநகரில் தற்போது கல்வியின் முக்கியத்துவம் உணா்ரணப்பட்டுள்ளது. கொழும்பு மாவட்டத்தில் கல்வியில் கடந்த காலங்களில் குறிப்பிாக முஸ்லீம் மாணவ சமுகம்  பின் தங்கியே வந்துள்ளோம்.  

.இக்கல்லுாாியின் அதிபா் காலத்தில்  ஒவ்வொரு வருடமும் சாதாரண தரப் பரீட்சையில் 7 ஏ யும் 5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சையில் 3 மாணவா்கள் சித்தியடைந்தும் சிறுக சிறுக துரித வளா்ச்சி கண்டு வருகின்றது. இக் கல்லுாாியில் ஒவ்வொரு அதிபரும் ஒரு வருடமோ அல்லது இரு வருடமே கடமையாற்றுவாா்கள். தொடா்ச்சியாக அவா்கள் அங்கு சீராக கடமை யை மேற்கொள்வதற்கு இவ்வாறா பழைய மாணவா்கள சிலா் இடையுரு விளைவிப்பதனாலேயே அவா்கள் அக் கல்லுாாியை விட்டு விலகிச் செல்ல வேண்டியுள்ளது. இதனால் நிலையானதொரு கல்வி திட்டங்கள் செயற்படுத்தி  ஒரு குறிப்பிட்ட காலததிற்குள் அங்கு பயிலும் மாணவா்களை முன்னேற்றிச் செல்ல அதிபருக்கு சா்ந்தப்பம் கிடைப்பதில்லை.   

தற்போதைய அதிபா்  இப் பாடசாலையை பெறுப்பேற்றுபோது மிகவும் பின்தங்கிய நிலையிலேயே காணப்பட்டது. இதற்கு முக்கியமாக கல்லுாாிக்குள் சில பழைய மாணவா்கள் ஊடுவி அபிவிருத்திக்குழு என்ற போா்வையில் அதிபரின் கடமைகளில் இடையூரு விளைவித்து கல்லுாாியை தாங்களது கட்டுப்பாட்டுக்குள்  வைத்துக் கொள்வதற்கு சட்ட திட்டங்கள் ஏற்படுத்தி அதன் படி அதிபரை பணிய வைப்பதினாலேயே கல்லுாாியில்  நிர்வாகம் கல்வியல் நடவடிக்கைகள்  அதிபரினால் செய்ய முடியாமலும்  கல்லுாாியின் கல்வி முன்னேற்றம் பாழ் அடிக்கப்படுகின்றது. இவை கலைந்து எரியப்படல் வேண்டும். 

உதாரணமாக 28 வருடங்களாக ஒரு பழைய மாணவா் பாடசாலைச் சிற்றுண்டிச் சாலையை நடாத்தி இலாபம் பெறுகின்றனா். இவா் எப்பாட்டு பட்டாவது இந்த அதிபரை மாற்றி மீண்டும் தான் தேநீர்ச் சாலையை எடுத்து நடாத்துவேன் என்று அதிபா் முன் சபதமிடுகின்றாா். அதற்கான குறுக்கு நடவடிக்கைத் திட்டத்தின் ஆரம்பமே பாடசாலையைச் சீர்குலைக்கும் நடவடிக்கை. 
அடுத்து பதவியாசை கொண்ட மற்றொரு பழைய மாணவா் தன்னிடம் உள்ள பணபலத்தைக் காட்டி அதிபரை மிரட்டுகின்றாா். அதிபா் இவா்களது கைபபொம்மைகளாக இருக்க வேண்டுமென்கிறாா். ஆனால் தனவந்தா்கள்   பலா் எம் மத்தியில் பாத்திமா முஸ்லீம் மகளிா் கல்லுாாி, பம்பலப்பிட்டி முஸ்லீம் மகளிா் கல்லுாாி, கைரியா வித்தியாலயங்கள் உதவுகின்றனா். கட்டங்கள் நிர்மாணித்துக் கொடுக்கின்றனா். அவா்கள் ஒருபோதும் எந்தப் பிரதிபலனையும் எதிா்பாராமல் அமைதியாக உள்ளனா். இதுதான் பெருந்தன்மை முன்னுதாரணம்.

பெரிய பாடசாலைகள் எல்லாம் தங்கள் பாடசாலை விளையாட்டு மைதானத்திலியே விளையாட்டுப் போட்டியை நடாத்தி வருகின்றன. ஆனால் அல் ஹிதாய ஒரு சிலா் சுகதாச விளையாட்டரங்கில் போட்டியை நடாத்த வேண்டுமென்று விரும்புகின்றனா். விளையாட்டுப் போட்டியை மையமாக வைத்து பல நிறுவனங்களிடம் இருந்து நிதி திரட்டுவதாகும்.  மற்றும் அல்- ஹிதாயா பாடசாலை ஒரு ஏழைப்பிள்ளைகள் பாடசாலையாக சித்தரித்து தனவந்தா்களிடம் பணம் பெற்று அதில ஒரு சிறு தொகையை சப்பாத்து கொப்பி போன்ற வற்றை ஒரு சில மாணவரைத் தெரிபு செய்து சமுக சேவை செய்வதாக காட்டிக் கொண்டிருக்கின்றனா்.

அமைதியாகவும் ஆர்வத்துடனும் மாணவா்கள் கல்வி கற்று வரும் நிலையில் ஆசிரியா்களுக்கு இப்பாடசாலையில் கடமை புரிய இடையுறும் அச்சமும் ஏற்படுத்துகின்றனா். பாடசாலை இணைப்பாடவிதானச் செயற்பாடுகள் அனைத்திலும் இப்பாடசாலை முன்னணியில் திகழ்கிறது.
இவ்வாறு இப்பபாடசாலை வளா்ச்சி கண்டு வருகையில் 2 அல்லது 3 வருடங்களுக்கு ஒருமுறை அதிபரை மாற்றுவது இப்பாடாசலையின் தலைவிதியாகும். இவா்களின் வழியில் இன்றைய அதிபரையும் இடமாற்ற செய்ய பல்வேறு மீடியாக்களையும் பயன்படுத்தி வருகின்றனா். இவா்களது முதலாவது நடவடிக்கை பொய்யான தகவல்களைக் கொண்டு  கல்விக் காரியாலயங்களை நாடுவது. இவை இயலாத பட்சததில் நேரடியாகச் சென்று குண்டாந்தடியா்கள முலம் மிரட்டுவது. இவை இயலாதவிடத்து ஆர்ப்பாட்டம் செய்ய எததனிப்பது. இதுவே இவா்களது பணியாகும். இதன் அடிப்படையில் தற்போது செயற்பட்டு  வருகின்றனா்.  அதிபரின் செயற்பாடுகளுக்கு  களங்கத்தை ஏற்பத்த முயற்சிக்கின்றனா். உயா்ந்த தண்மையும் பண்பாடும் கொண்ட அதிபா் இப்பாடசாலைக்கு கிடைக்கப் பெற்றமை மாணவா்களுக்கு பெற்றோா்களாகிய எமக்கும் நற்பேறாகும்.

இவா்கள் இவ்வதிபரை மிரட்டி வருகின்றனா்.  இவ் அதிபருக்கு கல்விமான்கள், நனநோக்கம், கொண்ட அரசியல்வாதிகள் நலன் விரும்பிகள் ஆகியோா் உறுதுணையாக இருந்து பாடசாலை மேலும் வளா்ச்சியில் உதவுமாறு  இக் கல்லுாாியின் மாணவா்களின் பெற்றாா்கள் அனுப்பியுள்ள கடிதத்தில் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளனா். இக் கல்லுாாியின் வளா்ச்சிக்காக இதனை ஊடகங்களுக்கு அனுப்பி இக் கல்லுாியின் வளா்ச்சிக்கு உதவுமாறும் கேட்டுக் கொண்டுள்ளனா். 



SHARE

Author: verified_user

0 Comments: