மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த காலங்களில் ஏற்பட்டிருந்த அசம்பாவிதங்களினால் தற்போது இலங்கையிலே வறுமை கூடிய மாவட்டமாக மட்டக்ளப்பு மாவட்டம் இருந்து கொண்டிருக்கின்றது.
தற்போதைய நிலையில் இந்நாட்டில் அரசியலில், மாற்றம் ஏற்பட்டிருக்கின்றது. கடந்த காலத்தில் இருந்த ஜனாதிபதியின் ஆட்சிக் காலத்தில் தமிழ் மக்களுக்கு பாரிய கஷ்ட்ட, நஷ்ட்டங்கள் ஏற்பட்டடிருந்தன இவற்றை எமது மக்கள் ஒருபோதும் மற்றக்க மாட்டார்கள்.
என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட கிழக்கு மாகாணசபை உறுப்பினர் மார்க்கண்டு நடராசா தெரிவித்துள்ளார்.
மேற்படி கிழக்கு மாகாண சபை உறுப்பினரின் மாகாணசபை பன்முகப் படுத்தப்பட்ட நிதியுதவியின் கீழ் உதவி வழங்கும் நிகழ்வு இன்று வெள்ளிக் கிழமை (08) ஓந்தாச்சிமடம் சமூக பராமரிப்பு நிலையத்தில் இடம் பெற்றது. இதில் காலந்து கொண்டு பயனாளிகளுக்கு பொருட்களை வழங்கி வைத்து விட்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இதன்போது அவர் மேலும் குறிப்பிடுகையில்….
தற்போதைய ஜனாதிபதி ஒரு நல்லாட்சியை நோக்கி சகல கட்சிகளையும் உள்ளடக்கி செயற்படுவதனால் எமது தமிழ் மக்கள் ஓரளவு சுதந்திரமாகவும், சுயமாக வாழ்வாதார ரீதியில் செயற்படக் கூடியதாகவும், அமைந்துள்ளது.
எது எவ்வாறு அமைந்திருந்தாலும் இதுவரைகாலமும் இந்நாட்டிலே புரையோடிப் போயுள்ள தமிழர்களின் பிரச்சனைகள் தீர்க்கப் படவில்லை. அத்தீர்வுக்காக எமது தலைவர்கள் தொடரந்து பாடுபட்டுக் கொண்டிருக்கின்றார்கள், எமது தமிழ் மக்களுக்காக மிகவிரைவில் ஒரு சிறந்த தீர்வினை நாம் எதிர் கார்த்திருக்கின்றோம். இத்தீர்வானது கிடைக்கக் கூடிய சாத்தியக் கூறுகள்தான் தெற்போதைய நிலையில் தென்படுகின்றன.
மட்டக்கள்பபு மாவட்டத்தில் கடந்த கால யுத்ததினால் பாதிக்கப்பட்டவர்களுக்கும், விதவைகளுக்கும், மற்றும் இளைஞர் யுவதிகளையும், கருத்தில் கொண்டு கிழக்கு மாகாகண முதலமைச்சரோடு இணைந்து சில செயற்றிட்டங்களை நாம் அமைந்துள்ளோம்.
வெளிநாட்டு முலதனங்களைச் செய்யக்கூடயவர்களை இனங்கண்டு கிழக்கில் பல தொழிற் போட்டைகளை அமைந்து இங்குள்ள படித்த இளைஞர் யுவத்திகளின் வேலைவாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுக்கும் செயற்றிட்டத்தினை இவ்வருடம் நடைமுறைப் படுத்தவுள்ளோம். ஏன அவர் தெரிவித்தார்.
மண்முனை தென் எருவிப் பற்று பிரதேச செயலாளர் கலாநிதி. எம்.கோபாலரெத்தினம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் உதவிப் பிரதேச செயலாளர் திருமதி.எஸ்.சத்தியகௌரி, சமூகசேவை உத்தியோகஸ்தர் கே.சிவகுமார். முன்பிள்ளை பருவ அபிவிருத்தி உத்தியோகஸ்தர் திருமதி.சீ.அருந்ததி, உட்பட பலர் கலந்து கொண்டிருந்தனர்.
இதன் போது கிழக்கு மாகாண சபை உறுப்பினர் மார்க்கண்டு நடாசாவின் 5 லெட்சம் ரூபாய் பன்முகப் படுத்தப்ப நிதியொதுக்கீட்டில் ஒரு லெட்சம் ரூபாய் பெறுமதியில் துறை நீலாவணை முதியோர் சங்கத்திற்கு தற்காலிக கொட்டகை ஒன்று, களுதாவளை கல்வி அபிவிருத்தி சங்கத்திற்கு 40000 ரூபாய் பெறுமதியில் கதிரைகள், எருவில் இளைஞர் சம்மேளனத்திற்கு 50000 ரூபாய் பெறுமதியில் அலுமாறி மற்றும், கதிரைகள், தெரிவு செய்யப்பட்ட 7 பயனாளிகளுக்கு தையல் இயந்திரங்களும், அரிசி அரைக்கும் இயந்திரம் ஒருவருக்கும் வழங்கப்பட்டமை குறிப்பிடத் தக்கதாகும்.
0 Comments:
Post a Comment