மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை மேற்கு பிரதேச செயலகப் பிரிவில், வாழ்வின் எழுச்சி திணைக்களத்தினால், இப்பிரதேசத்திலுள்ள 24 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளிலிருந்தும் தெரிவுசெய்யப்பட்ட குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு சுயதொழில் உபகரணங்கள் நேற்று முந்தினம் (20) வழங்கிவைக்கப்பட்டது.
பிரதேச செயலாளர் எஸ்.சுதாகர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், 212 குடும்பங்களுக்கு வாழ்வின் எழுச்சி வாழ்வாதாரத் திட்டத்தின் கீழ் விவசாயம், சிறுகைத்தொழில், மீன்பிடி, வியாபாரம் உள்ளிட்ட திட்டங்களுக்காக 57 இலட்சம் ரூபா பெறுமதியான, கொங்கிறீட் கல் தயாரிக்கும் இயந்திரம், மா அரைக்கும் மில், மிளகாய் அரைக்கும் மில், தண்ணீர் பம்பிகள், கோஸ் பைப்கள், தண்ணீர் தாங்கிகள், மீன்பிடி உபகரணங்கள் உள்ளிட்ட சுயதொழில் உபகரணங்கள் வழங்கப்பட்டது.
இதன் போது, பிரதேச செயலாளர் எஸ்.சுதாகர், உதவி பிரதேச செயலாளர் எஸ்.ராஜ்பாபு, கணக்காளர் கே.ஜெகதீஸ்வரன் வாழ்வின் எழுச்சி தலைமையக முகாமையாளர் ரி.சத்தியசீலன் முகாமைத்துவப் பணிப்பாளர் எஸ்.தமயந்தி மற்றும் திட்ட முகாமையாளர் கே.தில்லையம்பலம் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு தொழில் உபகரணங்களை வழங்கி வைத்தனர்.

0 Comments:
Post a Comment