25 Jan 2016

இஸ்லாமிய ரீதியிலான கல்விப்போதனைகளை ஏனைய பாடங்களிலும் புகுத்தவேண்டும் - மாகாணகல்விப்பணிப்பாளர் தெரிவித்தார்.

SHARE
(ஏ.எல்.எம்.சினாஸ்)

இஸ்லாமியரீதியிலானகல்விப்போதனைகளை ஏனைய பாடங்களிலும் புகுத்தவேண்டும் என மாகாணக் கல்விப்பணிப்பாளர் தெரிவித்தார்.
கிழக்கு மாகாணத்திலுள்ள சகலபாடசாலைகளிலும் இஸ்லாமிய ரீதியிலான கல்விப்போதனைகளை ஏனைய பாடங்களிலும் புகுத்தவேண்டும் என கிழக்குமாகாணக் கல்விப்பணிப்பாளர் எம்.ரீ.ஏ.நிஸாம் தெரிவித்தார்.
மருதமுனை பெரியநீலாவணை அக்பர் ஜூம்ஆ மஸ்ஜிதில் இயங்கும் குர்ஆன் மத்ரிஸா மாணவர்களின் பரிசளிப்பும் காலாநிதிபட்டத்தை பூர்த்திசெய்த எம்.எல்.முபாறக் மதனியை கௌரவிக்கும் நிகழ்வும் பெரியநீலாவணை அக்பர் ஜூம்ஆ மஸ்ஜிதில் தலைவர் ஐ.எல்.எம்.பாறுக் தலைமையில் 23.01.2016 நடைபெற்றது. இங்கு பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

இங்கு மேலும் பேசுகையில், விஞ்ஞானம் என்று நாம் சொல்லுவதெல்லாம் அல்லாஹ்வின் தத்துவங்கள் தான். உலகத்திலுள்ள எல்லாவகையான விடயங்களும் அல்லாஹ்வால் மனிதர்களுக்கு கொடுக்கப்பட்ட ஞானத்தின் அடிப்படையில் வெளிப்படுத்தப்பட்ட விடயங்கள்தான். உலகக் கல்வியிலும் இஸ்லாமிய அறிவுகள்தான் ஒளிந்திருக்கின்றது.
ஒரு ஆசிரியர் ஒரு பாடத்தை கற்பித்துவிட்டு அதனை முடிக்கின்றபோது அந்தப்பாடத்துக்கும் இஸ்லாமிய அறிவுக்கும் அல்லாஹ்வின் தத்துவங்களுக்கும் உள்ள தொடர்பை தெரியப்படுத்திவிட்டு அந்தப்பாடத்தை முடிக்கவேண்டும். என்ற அடிப்படையில் திட்டத்தை உருவாக்கிக் கொண்டிருக்கின்றோம்.

இஸ்லாமியஅறிவு என்றவகையில் பாடசாலைகள் எதுவும் செய்யவில்லை. என்பது எனதுகணிப்பீடாகும் இந்த மத்திரிஸாக்கள் இல்லாதுவிட்டால் பாடசாலைகளிலுள்ள இஸ்லாம் பாடத்தினுடாக ஒருபிள்ளை ஒருபோதும் குர்ஆனை ஓதிவிடாது. குர்ஆனை ஓதிக்கொடுப்பது சாதரணவிடயமல்ல ஜிப்ரீல் (அலை) செய்தபணியது. முகம்மத் (ஸல்) அவர்களுக்கு முதல் முதல் குர்ஆனை கற்றுக்கொடுத்தவர் ஜிப்ரீல் (அலை) அவர்கள். அந்த மிகப்பெரிய அந்தஸ்துடையவர் செய்த ஒருதொழிலை செய்வதற்கு இன்றுநாம் வெட்கப்படுகின்றோம். இந்தவெட்கம் இன்னும் கொஞ்சம் வியாபித்தால் மத்திரிஸாக்கள் இல்லாமல் போகும் வாய்ப்பு இருக்கிறது.

இன்று இஸலாமியஅறிவைக் கொண்ட சமூகம்ஒன்றை உருவாக்கவேண்டிய தேவை இருக்கின்றது. இஸ்லாமிய கல்வியூடான மாணவசமூதாயம் ஒன்றை உருவாக்கவேண்டியதன் அவசியம் ஏற்பட்டிருக்கின்றது. குர்ஆன், கதீஸ், இஸ்லாமியசட்ட நடவடிக்கைகள் போன்றவற்றை ஆராயக்கூடிய அறிவையும் இந்தமாணவர்களுக்கு வழங்கவேண்டியஒருதேவை இருக்கிறது.
எல்லா சமூகத்துக்கும் பொதுவானது குர்ஆன். அதுபோன்றுதான் முகம்மதுநபி (ஸல்) எல்லா சமூகத்துக்கும் தூதுவராவார். இஸ்லாமிய கல்வி நன்றாக வியாபிக்கும் வண்ணம் பாடசாலைகளுக்கும் அதனை கொண்டுசெல்ல வேண்டும். ஒவ்வொருமாணவர்களும் இஸ்லாமிய அறிவோடு வளர்க்கப்படவேண்டும். பாடசாலைகளைஏன்? மத்திரிஸாக்கள் செய்யும் அதே பணிக்குரிய கல்விநிலையங்களாக மாற்றமுடியாது என்பதைப்பற்றி சிந்திக்கவேண்டும் எனத் தெரிவித்தார்.

நிகழ்வில் திறமைகளை வெளிப்படுத்தியகுர்ஆன் மத்திரிஸா மாணவர்களுக்கு பரிசும் நினைவுச் சின்னங்களும் வழங்கப்பட்டது. இஸ்லாமியநாகரிகத் துறையில் கலாநிதிப் பட்டத்தை பூர்த்திசெய்த கலாநிதி அ~;n~ய்க் எம்.எல்.முபாறக் (மதனி) நினைவுச் சின்னம் வழங்கப்பட்டு மாகாணகல்விப்பணிப்பாளரினால் கௌரவிக்கப்பட்டார். பெரியநீலாவணைஅக்பர் சமூகஒன்றியம் மாகாணகல்விப்பணிப்பாளரின் சேவையை பாராட்டி பொன்னாடைபோத்தி,நினைவுச் சின்னம் வழங்கி கௌரவித்தது. 



SHARE

Author: verified_user

0 Comments: