மட்டுப் படுத்தப்பட்ட போரதீவுப் பற்று பிரதேச கால் நடை வளர்ப்போர் கூட்டுறவுச் சங்கத்தினல் இவ்வருடம் (2016) அப்பகுதி பண்ணையாளர்களின் நலன்கருதி பல்வேறுபட்ட வாழ்வாதார ரீதியான செயற்றிட்டங்களை முன்நெடுக்கவுள்ளதாக அச்சங்கத்தின் தலைர் தெ.சிவபாதம் தெரிவித்துள்ளார்.
போரதீவுப் பற்று பிரதேசத்திலுள்ள கால்நடை பண்ணையாளர்களிடமிருந்து பயனாளிகளைத் தெரிவு செய்யும், கூட்டம் இன்று திங்கட்கிழமை (04) தும்பங்கேணி பால் பதனிடும் நிலையத்தில் இடம்பெற்றது. இதன்போது கலந்து கொண்டு பண்ணையாளர்கள் மத்தியில் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு கூறினார் இதன்;போது அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்….
கிழக்கு மாகாண கால்நடை அபிவிருத்தித் திணைக்களத்துடன் இணைந்து, தும்பங்கேளி கால்நடை வைத்திய அலுவலகத்தின் ஆதரவுடன், மட்டுப் படுத்தப்பட்ட போரதீவுப்பற்று பிரதேச கால்நடை அபிவித்திச் சங்கம். பண்ணையாளர்களின் நலன்கருதி பல்வேறுபட்ட வாழ்வாதார ரீதியான செயற்றிட்டங்களை முன்நெடுக்கவுள்ளது. அந்த வகையில்
இப்பிரதேத்திலிருந்து தெரிவு செய்யப்படும், 15 பேருக்கு நல்லின ஆட்டுக் கடா வழங்குதல், 3 பேருக்கு மாட்டுச் சாணத்தில் எரிவாயு தயாரிக்கும், இயந்திரம் வழங்குதல், 10 பேருக்கு மாட்டுக் கொட்டில் வழங்குதல், 3 பெருக்கு புல் வெட்டும் இயந்திரம் வழங்குதல், 2 பேருக்கு இறைச்சி விற்பனை செய்யக்கூடிய குளிர்சாதனப் பெட்டிகள் வழங்குதல், 2 பேருக்கு பால் கறங்கும் இயந்திரம் வழங்குதல், 10 பேருக்கு எருமை மாடு வளர்ப்புக் கொட்டில் வழங்குதல், 10 பேருக்கு ஆட்டுக் கொட்டில் வழங்குதல், 3 பேருக்கு கோழிக்குஞ்சு பொரிக்கும் இயந்திரம் வழங்குதல், 10 பேருக்கு நல்லின இனவிருத்திக் காளைகள் வழங்குதல் போன்ற பல உதவித் திட்டங்கள் வழங்கப் படவுள்ளன.
இவுதவிகள் யாவும், அரைவாசி மானிய விலைக்கழிவுடன் கால்நடைப் பண்ணையாளர்களுக்கு வழங்கப்படவுள்ளதாகவும், இவ்வுதவிகளைப் பெற்று இப்பகுதி கால்நடை வளர்ப்பாளர்கள் வாழ்வாதார ரீதியாக முன்னேற்றம் காணவேண்டும் எனவும் அவர் இதன்போது தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment