6 Jan 2016

மட்.கல்குடா கல்வி வலயத்தில் வரலாற்றில் முதல் தடவையாக மருத்துவத் துறைக்கு மாணவி ஒருவர் தெரிவு

SHARE
மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்குடா கல்வி வலயத்தில் வரலாற்றில் முதல் தடவையாக மருத்துவத் துறைக்கு மாணவி ஒருவர் தெரிவு செய்யப் பட்டுள்ளதாகவும், இது நகர் புறத்துக்கப்பாலும் திறமைகள் வெளிப்படுத்தப் படுவதற்கு இது ஒரு மைல் கல் என்றும் கல்குடா வலயக்கல்விப் பணிப்பாளர் எஸ்.சிறிகிருஸ்ணராஜா தெரிவித்தார்.

கடந்த வருடம் நடைபெற்ற கல்வி பொதத் தர உயர்தரப் பரீட்சையில் வாழைச்சேனை - பேத்தாளை விபுலானந்தா வித்தியாலயத்தில் உயர்தரப் பரீட்சைக்கு உயிரியல் துறையில் தோற்றிய நாகேந்திரன் ராஜிதா என்ற மாணவியே மாவட்டத்தில் 25 ஆவது இடத்தினைப் பெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இவர் மருத்துவத் துறைக்குத் தெரிவானமையையிட்டு மகிழ்ச்சியடைவதாகவும், பாடசாலையின் ஆசிரியர்கள், அதிபர், பெற்றோர்களுக்கும் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதுடன் தொடர்ந்து வலயத்தின் அனைத்து பாடசாலைகளும் இதனை ஒரு முன்மாதிரியாக எடுத்துக் கொண்டு செயற்படுவதன் மூலம் வலயத்திலிருந்து அனைத்துத் துறைகளுக்கும் மாணவர்களை அனுப்ப முடியும் என்றும் தெரிவித்தார்.

அதே நேரம், கதிரவெளி விக்னேஸ்வரா வித்தியாலயத்தில் கலைப்பிரிவில் 3 ஏ தரச்சித்தியைப் பெற்றுள்ளார். பால்சேனை மகா வித்தியத்தியாலயத்திலிருந்து 6 மாணவர்கள் பரீட்சைக்குத் தோற்றி அனைத்து மாணவர்களும் பல்கலைக்கழக அனுமதிக்கான சித்தியைப் பெற்றுள்ளனர்.

சித்தாண்டியிலுள்ள வந்தாறுமூலை மத்திய மகாவித்தியாலயத்தில் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட தொழில் நுட்பத்துறையில் தோற்றிய மாணவர்கள் மாவட்டத்தில் 2 முதல் 6 இடங்களைப் பிடித்துள்ளனர்.

பேத்தாளை விபுலானந்தா வித்தியாலயம், வந்தாறுமூலை மத்தியமாகா வித்தியாலயம், கதிரவெளி விக்னேஸ்வரா வித்தியாயலயம், பால்சேனை வித்தியாலயம், ஆகியவற்றின் இந்த எடுத்துக்காட்டுக்கள் எதிர்காலத்தில் பின்தங்கிய பகுதிகளிலிருந்தும் உயர் துறைகளுக்கு மாணவர்கள் செல்லலாம் என்பதற்கு நல்லதொரு முன்மாதிரியாகும், அத்துடன், ஒரு உந்து சக்தியுமாகும் என்றும் வலயக்கல்விப் பணிப்பாளர் மேலும் தெரிவித்தார்.

SHARE

Author: verified_user

0 Comments: