அம்பாறை, பொத்துவில் பிள்ளையார் கோவிலில் இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை திருட்டுப் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கோவில் உண்டியல் உடைக்கப்பட்டு அதிலிருந்த பணமும்; நேர்த்திக்கு கிடைத்த பொருட்களும்
திருட்டுப் போயுள்ளன. இத்திருட்டுச் சம்பவம் தொடர்பில் தம்மிடம் கோவில் நிர்வாகத்தினர் முறைப்பாடு செய்துள்ளதைத் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் கூறினர்.(tm)
0 Comments:
Post a Comment