தைப்பூசத்தினை சிறப்பிக்கும் முகமாக மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கதிரறுப்பு மற்றும் வயல் விழாக்கள் என பல்வேறு நிகழ்வுகள் இடம்பெற்றன.
அந்த வகையில் கதிரவெளி புச்சாக்கேணி கிராம பொதுமக்களால் ஏற்பாடு செய்யப்பட்ட வயல்விழா நிகழ்வு ஞாயிற்றுக் கிழமை (24) புச்சாக்கேணி ஸ்ரீ செந்தூர் முருகன் ஆலயத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண விவசாய அமைச்சரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளருமாகிய கிருஸ்ணபிள்ளை துரைராசசிங்கம் கலந்து கொண்டதுடன், அமைச்சரின் பிரத்தியேகச் செயலாளர் மற்றும் கிராமப் பிரமுகர்கள், விவசாயிகள், ஆலய நிர்வாகிகள் பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், பொது மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
இதன் போது புச்சாக்கேணி வயலில் அமைச்சரினால் முதலில் கதிரறுப்பு நிகழ்வு இடம்பெற்று பின்னர் ஸ்ரீ செந்தூர் முருகன் ஆலயத்தில் கதிர்ப்பூசை மற்றும் விசேட வழிபாடுகள் இடம்பெற்றன. இதன் பின்னர் அமைச்சர் புச்சாக்கேணி மக்களுடன் கலந்துரையாடலிலும் ஈடுபட்டார்.
0 Comments:
Post a Comment