1 Jan 2016

அரச உத்தியோகஸ்தர்களின் நலன் கருதி அரசாங்கம் பல்வேறுபட்ட நலன்களை ஏற்படுத்தி வருகின்றது – பிரதேச செயலாளர் கோபாலரெத்தினம். (வீடியோ)

SHARE
அரச உத்தியோகஸ்தர்களின் செயற்பாடுகள் அனைத்தும் வினைத்திறன் மிக்கதாக அமைய வேண்டும், என எமது அமைச்சின் சுற்றுநிருபம் தெரிவிக்கின்றது. அந்த வகையில் இலங்கையின் பொருளாதாரத்தினை மேன்மை தங்கிய பொருளாதாரமதாகவும், தன்னிறைவுள்ள பெருளாதாரதாகவும், மாற்றுவதுடன, மக்களிடத்தில் அப்பொருளாதாரம் சமமான முறையில் பகிர்ந்தளிக்கப்பட்டு அம்மக்களின் வாழ்வில் சந்தோசத்தினை அரச உத்தியோகஸ்hதர்கள் அரைனவரும் ஏற்படுத்த வேண்டும்.
என மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலாளர் கலநிதி எம்.கோபாலரெத்தினம். தேரிவித்துள்ளார்.

2016 ஆம் ஆண்டு முதல் நாளான இன்று வெள்ளிக்கிழமை (01) பிரதேச செயலகத்தில் நடைபெற்ற சத்தியப்பிரமாண நிகழ்வில் கலந்து கொண்டு உத்தியோகஸ்தர்கள் மத்தியில் உரையாற்றுகையிலே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் குறிப்பிடுகையில்…

எமது பிரதேச செயலக உத்தியோகஸ்தர்கள் அனைவரும் கடந்த வருடம் மக்களுக்கு சிறந்த வேவையினை ஆற்றியிருந்தீர்கள் அதற்காக நான் னைவருக்கும் நன்றிதெரிவித்துக் கொள்கின்றேன். அரச உத்தியோகஸ்தர்கள் மக்களுக்குச் சிறந்த வேவை செய்வதற்காக வேண்டி கடந்த வருடம் அரசு 10000 ரூபாய் சம்மள உயர்வு அதிகரித்துள்ளதோடு இவ்வருடமும் சம்மளம் உயர்த்தப்பட்டுள்ளது. 

அரச உத்தியோகஸ்தர்களின் நலன் கருதி அரசாங்கம் பல்வேறுபட்ட நலன்களை ஏற்படுத்தி வருகின்றது. ஆனால் அனைத்து அரச உத்தியோகஸ்தர்களும், சரியான சேவையினை மக்களுக்கு வழங்க வேண்டும். 

பொதுமக்களில் சிலர் வசதிபடைத்தவர்களாகவும், பலர் ஏழைகளாகவும் உள்ளார்கள், எனவே யாருக்கு உதவிகள், சேவைகளை மேற்கொள்ள வேண்டும் என்பது தொடர்பில் அரசு சுற்று நிருபத்தின் மூலம் அறிவித்துள்ளது. எனவே உத்தியோகஸ்தர்கள்,  மக்களுக்கு பாகுபாடின்றி எமது சேவைகளை மேற்கொள்ள வேண்டும்.

எனவே கடந்த வருடத்தில் திணைக்களத் தலைவர்களுக்கும், பொதும்களுக்கும் ஒத்துழைப்புக்களை வழங்கி சேவை செய்ததைப் போன்று சந்தோசமாக சிரித்த முகத்துடன் மக்களுக்குச்சேவை உத்தியோகஸ்தர்கள் அனைவரும், சேவை செய்யவேண்டும். என அவர் தெரிவித்தார்.

SHARE

Author: verified_user

0 Comments: