14 Jan 2016

மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியின் தரம் ஒன்று மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு

SHARE
மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியின் தரம் 01 மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு இன்று வியாழக் கிழமை (14) கல்லூரியின் அதிபர் ஜே.ஆர்.பி.விமல்ராஜ் தலைமையில் நடைபெற்றது. இதன் போது தரம் ஒன்று மாணவர்களை தரம் 02 மாணவர்கள் மாலைகள் அணிவித்து வரவேற்றனர். 

இந்நிகழ்வில் மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வி.தவராஜா, புளியந்தீவு மெதடிஸ்த திருச்சபையின் முகாமைக்குரு ஜே.டபிள்யூ.யோகராஜா ஆகியோர்கள் பிரதம அதிதிகளாகவும் மட்டக்களப்பு வலயக்கல்வி அலுவலகத்தின் ஆரம்ப கல்வி உதவிக்கல்விப் பணிப்பாளர் கே.பாஸ்கரன், பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர் கே.சசிதரன், பிரதி அதிபர் கே.பாஸ்கரன், ஆரம்பப்பிரிவு பாட பொறுப்பாசிரியர் திருமதி. வனஜா பாலநாயகம் பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தினர், பழைய மாணவர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு மாணவர்களை வரவேற்றனர்.

இதன்போது மாணவச் சிறார்களின் கலைநிகழ்வுகள் இடம்பெற்றமையும் குறிப்பிடத் தக்கதாகும். 













SHARE

Author: verified_user

0 Comments: