30 Jan 2016

மட்டு பொலிஸார் ஏற்பாட்டில் நடைபயிற்சி

SHARE
தொற்றா நோய்களைக் கட்டுப்படுத்தும் நோக்கோடு உடற்பயிற்சியை வலியுறுத்தி மட்டக்களப்பு பொலிசாரினால் ஏற்பாடு செய்யப்பட்ட நடைப்பயிற்சி நேற்று வியாழக்கிழமை (28) மட்டக்களப்பு நகரில் நடைபெற்றது.
விளையாட்டு மற்றும் உடல் நல வலுவூட்டும் தேசிய வார தினத்தை முன்னிட்டு ஆரம்பமான நடைப்பயிற்சி பொலிஸ் நிலையத்திலிருந்து ஆரம்பமாகி திருமலை வீதி, நகர மணிக்கூட்டுக் கோபுரச் சந்தி, சுங்க வீதி, மத்திய வீதி வழியாக பொலிஸ் நிலையத்தை வந்தடைந்தது.

ஜனாதிபதியின் அறிவுறுத்தலுக்கமையவும் மற்றும் விளையாட்டு அமைச்சின் சுற்று நிருபத்திற்கிணங்கவும் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வில்

மட்டக்களப்பு அம்பாரை பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஜயகொட ஆராச்சி, மட்டக்களப்பு பொலிஸ் அத்தியட்சகர் உபாலி ஜெயசிங்க, உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எஸ்.வி. ரட்னாயக்கா, பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி எச்.டபிள்யு. ஹெட்டியாராச்சி, சிவில் பாதுகாப்பு சபையின் உறுப்பினர்கள் உள்ளிட்ட பொலிசார் கலந்து கொண்டனர்.


SHARE

Author: verified_user

0 Comments: