மனிதாபிமான விவகாரங்களுக்கான இலங்கையின் ஐ.நா வதிவிட இணைப்பாளர் சுபினே நந்தி தனது பதவிக் காலத்தை முடித்துவிட்டு, ஆசிய பசுபிக் பிராந்தியத்துக்கான பணிப்பாளர் நாயகமாக பதவி உயர்வு பெற்றுச் செல்வதை முன்னிட்டு, அவருக்கு கைத்தொழில் வர்த்தக அமைச்சில் நடாத்தப்பட்ட பாராட்டு வைபவத்தில் அமைச்சர் ரிசாட் பதியுத்தீனால் திங்கட் கிழமை (11) நினைவு சின்னம் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்வில் கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர் அலிஇ சீமேந்து கூட்டுத்தாபனத் தலைவர் ஹுசைன் பைலா, மௌலவி சுபியான், ஏற்றுமதி அபிவிருத்தி சபையின் பணிப்பாளர் கலாநிதி. மரைக்கார். உப்புக் கூட்டுத்தாபனத் தலைவர் எம்.எம்.அமீன், ஆய்வாளர்.மொஹிடீன், அமைச்சின் ஆலோசகர் சிராஸ் மீரா சாஹிப் மற்றும் உலமாக் கட்சியின் தலைவர் முபாரக் மௌலவி உற்பட அமைச்சின் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொண்டனர்.
0 Comments:
Post a Comment