ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பதவியேற்று ஓரு வருடம் பூர்த்தியாவதை முன்னிட்டு நாட்டிற்கும் நாட்டு மக்களுக்கும் நல்லாட்சி வேண்டியும் நாட்டின் சுற்றாடல் கட்டமைப்பை பாதுகாப்பதற்காகவும் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் விசேட வழிபாட்டு நிகழ்வுகள், மர நடுகைகளும் இடம் பெற்றன.
மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரதான மர நடுகை நிகழ்வு இன்று காலை மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தலைமையில் கோட்டைப் பூங்கா மற்றும் மாவட்ட செயலக வளாகம் ஆகியவற்றில் நடைபெற்றன.
இதன்போது, மாவட்ட அரசாங்க அதிபர், மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.கிரிதரன், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் ஆர்.நெடுஞ்செழியன், உள்ளக பிரதம கணக்காய்வாளர் எஸ்.தேவகாந்தன், உதவி மாவட்டச் செயலாளர் எஸ்.ரங்கநாதன், கணக்காளர். கே.பிரேமகுமார், நிருவாக உத்தியோகத்தர், பிரதித்திட்டமிடரல் பணிப்பாளர்கள் உள்ளிட்டோரும் மரக் கன்றுகளை நட்டு வைத்தனர்.
இந் நிகழ்வுகளில் மாவட்ட செயலக அதிகாரிகள் உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.
நல்லாட்சி அரசாங்கத்தின் ஒரு ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு நாட்டுக்கும் மக்களுக்கும் நல்லாசி வேண்டி இன்று 08ஆம் திகதி வெள்ளிக்கிழமை மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டக்களப்பு மாமங்கேஸ்வரர் ஆலயம் மங்களராமய விகாரை ஜம்மியுல் ஸல்லாம் ஜீம்மா பள்ளிவாயல் புனித மரியாள் பேராலயம் ஆகியவற்றில் விசேட சமய வழிபாடுகள் நடைபெற்றன.
அதே நேரம் மாவட்டத்தின் 14 பிரதேச செயலாளர் பிரிவுகள் ரீதியாகவும் ஒவ்வொரு கிராம சேவையாளர் பிரிவு ரீதியாகவும் இது போன்ற நிகழ்வுகள் ஏற்பாடு பிரதேச செயலாளர்கள், திணைக்களத் தலைவர்கள், கிராம சேவையாளர்கள் தலைமையில் நடைபெற்றன.
0 Comments:
Post a Comment