26 Jan 2016

அமைதியான, ஒழுக்கமான முழுமையான, சிறந்த மனிதர்களைக் கொண்ட தேசத்தை ஒன்று சேர்ந்து கட்டியெழுப்புவோம்

SHARE
அமைதியான, ஒழுக்கமான முழுமையான, சிறந்த மனிதர்களைக் கொண்ட தேசத்தை ஒன்று சேர்ந்து கட்டியெழுப்புவோம் என்ற தொனிப்பொருளில் கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால் நாடளாவிய ரீதியல் நடைமுறைப்படுத்தப்படும் கெடி வாரத்தின் இறுதி நாளான திங்கட் கிழமை (25) மட்டக்களப்பு மாவட்டத்தில் அரசாங்க அதிபர், திணைக்களத்தலைவர்களுக்கு கொடிகள், மற்றும் ஸ்ரிக்கர்கள் வழங்கப்பட்டன.

மாவட்ட அரசாங்க அதிபரின் காரியாலயத்தில் இந்த நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்வில், மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ், உதவி மாவட்டச் செயலாளர் எஸ்.ரங்கநாதன்,  திட்டமிடல் பணிப்பாளர் ஆர்.நெடுஞ்செழியன், வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையின் மட்டக்களப்பு மாவட்ட முகாமையானர் கே.ஜெகநாதன், கலாசார அபிவிருத்தி உத்தீயோகத்தர் எம்.ஏ.சீ.ஜெனுலாப்தீன் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.
மாவட்ட, பிரதேச மட்டங்களில் கலாசார அதிகாரசபைகளை பலப்படுத்தும் வகையில் கொடிவாரம் கடந்த 19 ஆம் திகதி முதல் நாடளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

இக்கொடி மற்றும் ஸ்ரிக்கர் விற்பனைகளால் கிடைக்கப்படும் பணத்தில் கலாசார அதிகார சபையினை பலப்படுத்துதல் கலாசார அலுவல்களின் செயற்படுத்தல் போன்ற நடவடிக்கைகள் ஏற்படுத்தப்படவுள்ளன.






SHARE

Author: verified_user

0 Comments: