23 Jan 2016

மட்டு வைத்திய சங்கத்தின் புதிய தலைவருக்கான பதவி சூட்டும் விழா

SHARE
மட்டக்களப்பு வைத்திய சங்கத்தின் புதிய தலைவருக்கான - 2016 பதவி சூட்டும் நிகழ்வு நேற்று முந்தினம் (21) மாலை  மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் புதிய தலைவராக குழந்தை மருத்துவ நிபுணர் சித்திரா வாமதேவன் தெரிவு செய்யப்பட்டார். அதனைத் தொடர்ந்து நடைபெற்ற நிகழ்வில் உரையாற்றிய புதிய தலைவர், வியாதிகளினால் ஏற்படும் மரணங்கள், அங்கங்களின் செயலின்மை தற்போது அதிகதித்துள்ளது என தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

தொற்றா நோய்களான இருதய நோய்கள், நீரிழிவு, விபத்துக்கள், தற்கொலைகள், டெங்கு போன்ற பரவலாக இருக்கும் தொற்று நோய்கள் என்பன தற்போது எமது சமூகத்தில் பாரிய சவாலாக உள்ளது. நவீன தொழில்நுட்ப உபயோகங்களைப் பயன்படுத்தி வியாதிகளை வரும் முன்பே தடுத்து சுகமளிக்கும் திட்டங்கள், தூரத்தில் இருக்கும் மூலை முடுக்குகள் எல்லாவற்றிக்கும் இந்த நிவாரணங்கள் சென்றடைய வைத்தல் மற்றும் இக்கட்டான நிலமையிலும் சான்றுகள் வைத்து செய்யும் ஆராய்ச்சிகளின் விளைவுகள் தான் எமக்கு மருத்துவ சேவைக்குத் தேவையுமானது.

1972 இல் வைத்தியக் கலாநிதி ஜெகா பசுபதியின் தலைமையில் மட்டக்களப்பு மருத்துவ சங்கம் ஆரம்பிக்கப்பட்டது. அன்றிலிருந்து இன்று வரை 1978- சூறாவளி,  2004 - சுனாமி,  2007- யுத்தத்தால் உள்நாட்டில் இடம்பெயர்வு போன்ற மக்களின் இக்கட்டான காலகட்டங்களில் பாரிய மனிதாபிமான பாரிய உதவிகளை வைத்திய சங்கத்தின் வைத்தியக் கலாநிதிகள் உள்ளிட்ட மருத்துவர்கள் செய்திருப்பதைக் கண்டு குறித் சங்கத்தின் தலைமை கிடைத்திருப்பதைக் கண்டு மகிழ்வதோடு பாரிய பொறுப்பையும் ஏற்றுள்ளேன்.

எத்தனையோ மேடு பள்ளங்களைச் சந்தித்திருந்தாலும் பொது மனிதாபிமானப் பணிகளை மருத்துவ அதிகாரிகள் சரிவரச் செய்துள்ளார்கள், சமூகத்திற்கு சேவை செய்யும் மருத்துவர்களின் தொழில் சார்ந்த மேம்பாட்டுக் கல்வியை வழங்குவதில் மருத்துவச் சங்கம் முன்னின்று உழைத்துள்ளது எனத் தெரிவித்தார்.

விடுகை பெற்றுச் செல்லும் தலைவர் வைத்தியக் கலாநிதி வி. ஜீவதாஸ் தெரிவு செய்யப்பட்ட புதிய தலைவருக்காக பதக்கத்தை அணிவித்தார். கிழக்குப் பல்கலைக் கழக தகுதிகாண் அதிகாரி பேராசிரியை உமா குமாரசாமிக்கு புதிய தலைவர் ஞாபகச் சின்னம் ஒன்றையும் வழங்கி வைத்தார்.

கிழக்குப் பல்பலைக்கழக மருத்துவ பீடத்தின் பீடாதிபதி கே.ரி. சுந்தரேசன், 2017 ஆம் ஆண்டிற்கான புதிய தலைவராக தெரிவு செய்யப்பட்ட வைத்திய கலாநிதி கே. சிவகாந்தன், வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் எல்.எம். நவரட்ணராஜா, சத்திர சிகிட்சை நிபுணர் பி. ஜீபரா, வைத்தியக் கலாநிதி வி. விவேகானந்தராஜா உள்ளிட்ட வைத்திய அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
Med ass o 1
Med asso
Medical asso 1

SHARE

Author: verified_user

0 Comments: