மட்டுப்படுத்தப்பட்ட கிழக்கு மாகாண பெண்கள் சுயதொழில் அபிவிருத்தி கூட்டுறவுச் சங்கத்தின் அங்கத்தவர்களது பிள்ளைகளின் கல்வியைக் கருத்தில் கொண்டு அவர்களுக்கான ஒரு தொகுதி பாடசாலை அப்பியாசப் புத்தகங்கள் மட்டு.மாவட்ட அரசாங்க அதிபரால் வழங்கிவைக்கப்பட்டது.
மட்டக்களப்பு கல்லடியிலுள்ள தொழில் துறைத்திணைக்கள வளாகத்தில் இயங்கும் இக் கூட்டுறவுச் சங்கமானது, வறுமைக் கோட்டின் கீழ் வாழும் பெண்கள் தலைமைதாங்கும் குடும்பங்களின் பெண்களை அங்கத்தவர்களாகக் கொண்டதாகும்.
இவர்கள் அரசாங்க அதிபரிடம் விடுத்த வேண்டுகோளுக்கமைவாக, பெண்கள் சுயதொழில் அபிவிருத்தி கூட்டுறவுச் சங்கத்தின் அங்கத்தவர்களது 21 குடும்பங்களைச் சேரந்த 50 பிள்ளைகளுக்கான கல்வி உபகரணங்கள் இன்றைய தினம் திங்கட்கிழமை (04) சங்கத்தின் தலைவி மற்றும் பொருளாளரிடம் வழங்கி வைக்கப்பட்டது.
இதற்கான அனுசரணையினை மட்டக்களப்பு லடர் ஒப் கோப் நிறுவனம் வழங்கியிருந்தது.
பெண்கள் சுயதொழில் அபிவிருத்தி கூட்டுறவுச் சங்கத்தின் உறுப்பினர்களான பெண்கள், தையல், கைவேலைப்பாடுகள், தின்பண்டங்கள் தயாரித்தல், காளான் வளர்ப்பு உள்ளிட்ட பல்வேறு சுயதொழில்களிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
பெண்கள் சுயதொழில் அபிவிருத்தி கூட்டுறவுச் சங்கத்தின் உறுப்பினர்கள் இந்தியாவின் சேவா நிறுவனத்தின் ஊடாகப் பயிற்சிகள் வழங்கப்பட்டவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
0 Comments:
Post a Comment