மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்லடி டச்பார் கடற்கரையில் ஞாயிற்றுக்கிழமை மாலை நீராடிய இளைஞன் கடலில் மூழ்கிய நிலையில் மட்டக்களப்பு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்.
கல்லடி கடற்கரைக்கு ஞாயிறு தினமாகிய இன்று குடும்பத்தாருடன் பொழுதினைக் கழிப்பதற்காக வருகைதந்த பனிச்சையடியை சேர்ந்த 25 வயதுடைய யூலியன் வின்சன் எல்மர் என்பவரே இவ்வாறாக கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
இவ்வாறாக கடலில் மூழ்கி காணாமல் போனநபரை இரண்டு மணித்தியாலங்களின் பின்னர் பிரதேச வாசிகளினால் மீட்கப்பட்ட நிலையில் பொலிசாரும் பொதுமக்களும் இணைந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்ட நிலையிலேயே சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் குறித்த இளைஞனின் சடலம் வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்.
0 Comments:
Post a Comment