மதப்பற்றாளர்கள் தனித்து தமது செயற்பாடுகளை முன்னெடுக்கும் சந்தர்ப்பத்தில் ஏனைய மதங்களின் நெறிமுறையினையும் மதித்து அவர்களின் முன்னெடுப்புக்களுக்கும் வழிகாட்டியாகத் திகழ வேண்டும். அத்துடன் மதம் சார்பான நிறுவனங்களில் சமூகப் பணிபுரிகின்றவர்கள் நடுநிலைமையுடன் பக்கச் சார்பற்ற தன்மையோடு தமது செயற்பாடுகளை முன்னெடுப்பதன் மூலம் மக்கள் மத்தியில் தன்னிறைவு ஏற்பட வழி ஏற்படும்.
என சனிக் கிழமை (09) துறைநீலாவணை மெதடிஸ்த மிஷன் தமிழ்க்கலவன் பாடசாலையில் நடைபெற்ற கலாசார நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே துறைநீலாவணை தெற்கு கிராம சேவை உத்தியோகத்தர் தினகரன்பிள்ளை கோகுலராஜ் தெரிவித்தார்.
பொது மக்களின் ஆதரவுடன் தெரிவு செய்யப்பட்ட சமயம் சார்பான நிறுவனங்களின் பிரதிநிதிகள் மக்களின் தேவைகள், மற்றும், பிரச்சினைகளை இனங்கண்டு அதற்கு ஏற்ற வகையில் திட்டங்களை மதங்களினூடக வகுக்க தம்மை அர்பணித்துக் கொள்ள வேண்டும். பண்டைய காலங்களின் மிஷ நெறிகள் பல உருவாக்கப்பட்டு கல்விச் செயற்பாடுளை முன்னெடுத்தமையினைப் போன்று எதிர்வரும் காலங்களிலும் சமயங்களினூடாக கல்விச் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட வேண்டும். அப்போதுதான் ஒழுக்க விழுமியங்கள் நிறைந்த சமூகத்தினை நம்மால் உருவாக்க முடியும் என அவர் தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment