உளநல மேம்பாட்டு வாரத்தினை முன்னிட்டு தொற்றா நோய்கள் சம்மபந்தமாக மாணவர்களை விழிப்பூட்டும் முகமாக விசேட கருத்தரங்கு வெல்லாவெளி சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தினால் நடாத்தப்பட்டது.
பழுகாமம் கண்டுமணி மகா வித்தியாலயத்தில் அதிபர் சு.உதயகுமார் தலைமையில் நடைபெற்ற இக் கருத்தரங்கில் வெல்லாவெளி பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி வே.குணராஜசேகரம் பொதுச் சுகாதார பரிசோதகர் மேற்பார்வையாளர் எஸ்.யோகேஸ்வரன், பிரதேசத்திற்கு பொறுப்பான பொதுச் சுகாதார பரிசோதகர் எஸ்.சுதர்சன், ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு விரிவுரைகளை நிகழ்த்தினர்.
தொற்றா
நோய்கள் பாரியளவில் மக்கள் மத்தியில் தாக்கத்தினை செலுத்திவருகின்றது இவ்
நோய்கள் சம்பந்தமாக அவதானத்துடன் இருக்க வேண்டும் என்பதுடன் மாணவர்களாகிய
நீங்கள் இந்த நோய்கள் சம்பந்தமான விளக்கத்தினைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என
வைத்திய அதிகாரி இதன் போது தெரிவித்தார்
0 Comments:
Post a Comment