8 Jan 2016

மலர்ந்துள்ள நல்லாட்சியில் மக்கள் எங்கும் தங்கு தடையின்றி சென்றுவரலாம் - பிரதேச செயலாளர் கோபாலரெத்தினம்-(வீடியோ)

SHARE
தமிழ் மக்கள் கடந்த காலங்களில் பல்வேறுபட்ட சொல்லொணாத் துயரங்களை அனுபவித்தவர்கள். தற்போது மலர்ந்துள்ள நல்லாட்சியில் எமது மக்கள் எங்கும் வாழலாம் எங்கும் தங்கு தடையின்றி சென்றுவரலாம், எந்த மொழியிலும் பேசி இந்நாட்டில் செயற்படுவதற்கு தற்போதைய அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. என மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலாளர் காலநிதி.எம்.கோபாலரெத்தினம் தெரிவித்துள்ளார்.
நல்லாட்சியின் ஒரு வருட பூர்தியை முன்னிட்டு இன்று வெள்ளிக் கிழமை (08) தேற்றாத்தீவு புனித யூதா திருத்தலத்தில் மரநடுகை இடம்பெற்றது. இதன்போது கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் குறிப்பிடுகையில்….

நல்லாட்சி அரசாங்கத்தின், ஒரு வருட பூர்தியை முன்னிட்டு நாடு பூராகவும், 15000 இற்கு மேற்பட்ட கிராமங்கள் ரீதியாகவும், சாந்தி சமாதானம் வேண்டியும், கடந்த வருடத்தைப் போன்று இனி வரும் வருடங்கள் சிறப்பாக நாட்டு மக்களுக்கு அமைய வேண்டும் என்பதற்காகவும், சகல ஆலயங்களிலும் விசேட பூஜை வாழிபாடுகள் இடம்பெற்றன. நாடு பச்சைப் பசேலென இருக்க வேண்டும் என்பதற்காக நாடு பூராகவும், மரநடப்பட்டன.  

தமிழ் மக்கள் கடந்த காலங்களில் பல்வேறுபட்ட சொல்லொணாத் துயரங்களை அனுபவித்தவர்கள். தற்போது மலர்ந்துள்ள நல்லாட்சியில் எமது மக்கள் எங்கும் வாழலாம் எங்கும் தங்கு தடையின்றி சென்றுவரலாம், எந்த மொழியிலும் பேசி இந்நாட்டில் செயற்படுவதற்கு தற்போதைய அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. 

எனவே கடந்த கால அசம்பாவிதங்ளை எமது மக்கள் மறந்து பிறரிடத்தில் அன்பு செலுத்தி, பிறருக்கு உதவிகளைச் செய்து சிறந்த நிருவாகக் கட்டமைப்புக்களை மக்கள் ஏற்றுக் கொண்டு, செயற்பட வேண்டும். இவற்றுக்கு அரச அதிகாரிகளும், ஏனையவர்களும், பொதுமக்களுக்கு ஒத்துழைப்புக்களை வழங்கி செயற்பட வேண்டும், 

எதிர் காலத்தில் இந்நாடு சமாதானமான முறையில் பயணிக்க வேண்டும், இதனூடாக பொருளாதாரங்கள் அனைத்தும் மக்களுக்கு சமமான முறையில் சென்றடையவும், அனைவரும் பொதுமக்களின் எதிர்கால நலங்களுக்காகச் சிந்தித்துச் செயற்பட வேண்டும் என அவர் தெரிவித்தார்.

SHARE

Author: verified_user

0 Comments: