யுத்தத்தினால் பாதிக்கப் பட்டவர்கள், விதவைகள். விசேட தேவையுடையவர்கள் போன்றோரை கடந்த காலத்திலிருந்த அரசாங்கம், கலனிக்கத் தவறியதனால் தற்போது அவர்களது வாழ்வாதாரங்களும், குடும்பங்களும் நலிவடைந்து காணப்படுகின்றன.
என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட கிழக்கு மகாணசபை உறுப்பினர் மா.நடராசா தெரிவித்துள்ளார்.
அவரது பன்முகப் படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டில் வாழ்வாதார உதவி வழங்கும் இநிகழ்வு இன்று செவ்வாய்க் கிழமை (12) போரதீவுப் பற்று பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது. இதில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இதன்போது அவர் மேலும் குறிப்பிடுகையில்….
எமது மக்களை இரத்தம் சிந்த வைத்த மஹிந்த ராஜபக்ச அரசாங்கத்தை எமது மக்கள் மாற்றியதன் விளைவாக தற்போது இந்த நாட்டிலே நல்லாட்சி என்ற ஒன்று உருவாகியிருக்கின்றது. இருந்த போதிலும் இனத் துவேசங்களை விதைத்த பெரும்பான்மைக் கட்சிகள் ஒன்று சேர்ந்து இந்த நல்லாட்சியில் பங்காளிகளாக இருக்கின்றார்கள். இந்த நல்லாட்சியில் இருக்கின்ற தலைவர்களிடத்தில் தற்போது மாற்றங்கள் தென்படுவதை அவாதனிக்க முடிகின்றது. இந்த மாற்றங்கள் தற்காலிகமானதா? அல்லது நிரந்தரமானதா? என்பதைக்கூட நிருணயிக்க முடியாதுள்ளது.
எமது மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு நீதிவேண்டும் அவற்றுக்கு நியாயமான தீர்வுக்ள எட்டப்பட வேண்டும் என்ற நோக்குடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள், இந்த நல்லாட்சி அரசுடன் ஒன்று சேராமல் எதிர்ப்பும், இல்லாமல் சாணக்கியமாகச் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தமிழ் மக்களிடமிருந்து அபகரித்த காணிகளை ஒரு அங்குலம்கூட விடமாட்டேன் என்ற காலம் மாறி, பல நூறு ஏக்கர் நிலங்கள் எமது மக்களிடம் ஒப்படக்கப் பட்டுள்ள நல்ல சகுனத்தைக் காணக் கூடியதாகவுள்ளது.
இவ்வாறான இக்காலகட்டத்தில் தமிழ் மக்களைக் குழப்பும் வகையில் மக்கள் மத்தியில் சில புதிய அமைப்புக்களை உருவாக்கி எமது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களின் முயற்சிகளைத் தாமதப் படுத்துவதற்கான செயற்பாடுகளில் சலர் ஈடுபட்டு வருவதையும், அவானிக்க முடிகின்றது. எனவே இவ்வாறான விடையங்களிலிருந்து மக்கள் மிகவும் விழிப்புடன் இருக்க வேண்டும். என அவர் தெரிவித்தார்.
போரதீவுப்பற்று உதவிப் பிரதேச செயலாளர் எஸ்.புவனேந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மாவட்ட சமூக சேவை அதிகாரிகளான எஸ்.அருள்மொழி, கே.செல்வநாயகம், பிரதேச செயலக சமூக சேவை உத்தியோகஸ்தர் இ.சிவலிங்கம், முதியோர் சங்கத்தினர், வலது குறைந்தோர் உட்பட பலர் கலந்து கொண்டிருந்தனர்.
இதன்போது கிழக்கு மகாணசபை உறுப்பினர் மா.நடராசாவின் பன்முகப் படுத்தப்பட்ட நிதியொதுக்கீட்டின் கீழ் 3 பேருக்கு தையல் இயந்திரங்களும், 2 முதியோர் சங்கங்களுக்கு தலா 40 கதிரைகளும், வழங்கப்பட்டன.
இவற்றினைவிட மத்திய அரசாங்கதின் விசேட தேவையுடயவர்களுக்கு வழங்கப்படுகின்ற, உதவித் தொகையாக, 55 விசேட தேவையுடயவர்களுக்கு தலா 21000 ரூபாய் வீதம் 1155000 ரூபாய் நிதியும் வழங்கி வைக்கப் பட்டமை குறிப்பிடத் தக்கதாகும்.
0 Comments:
Post a Comment