அம்பாறை, திருக்கோவில் பிரதேசத்தின் காட்டை அண்டிய பகுதிகளில் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளைக் கொண்ட குழுவினரால் இரவு வேளைகளில் திடீர்ச் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்படவுள்ளதுடன், சட்டவிரோத துப்பாக்கிகள்; பறிமுதல் செய்யப்படுமெனவும் வனஜீவராசிகள் திணைக்களத்தின்
அப்பிரதேச அதிகாரி ஏ.ஏ.ஹலீம், இன்று திங்கட்கிழமை தெரிவித்தார். அத்துடன், சட்டவிரோத துப்பாக்கிகளை வைத்திருப்போருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு தண்டனை வழங்கப்படுமெனவும் அவர் கூறினார். கடந்த வருடம் திருக்கோவில் பிரதேசத்தில் காட்டு யானைகள் துப்பாக்கிச் சூடு மற்றும் பட்டாசு, பொறிவெடிகளுக்கு இலக்காகி இறந்துள்ளதாக வனஜீவராசிகள் திணைக்கள மருத்துவர்களின் அறிக்கைகளில்; தெரிவிக்கப்பட்டுள்ளது.
உடனடியாக இதைத் தடுத்து காட்டு யானைகளை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு வனஜீவராசிகள் திணைக்களத்துக்கு இருப்பதினால், மேற்படி நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் அவர் கூறினார். -
0 Comments:
Post a Comment