11 Jan 2016

அரசியலில் இருக்கும் நான் இன்னாள் அரசியல் வாதிகளை நினைத்து வெட்கப் படுகின்றேன் படுகின்றேன் - ஜனா

SHARE
அமரர் நல்லையா எமது பிரதேசத்திற்கு அவரது பெயர் பதிக்கப்படாமலே ஆற்றிய சேவைகளை நினைத்துப் பார்க்கையில் அரசியலில் இருக்கும் நான் இன்னாள் அரசியல் வாதிகளை நினைத்துக் வெட்கப் படுகின்றேன். படுகின்றேன். என முன்னாள் மட்டக்களப்பு மவாட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தற்போதைய கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான கோவிந்தன் கரணாகரம் (ஜனா) தெரிவித்துள்ளார்.
கல்குடா தொகுதியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பனரும், அமைச்சருமான அமரர் நல்லையாவின் நினைவுகள் அடங்கிய வாழும் மனிதம் எனும் நூல் ஞாயிற்றுக் கிழமை (10) மட்டக்களப்பு ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில் வெளியிட்டு வைக்கப்பட்டது. இதில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் குறிப்பிடுகையில்….

அமரர் நல்லையா  1956 ஆம் அண்டுவரை நாடாளுமன்ற உறுப்பினராகவும், அமைச்சராகவும் இருந்து இப்பிரதேசத்திற்கு அளப்பெரிய சேவைகளை ஆற்றியிருந்தார். பின்னர் 1956 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் தோற்கடிக்கப் பட்டதாகத் தெரிவிக்கப் படுகின்றது. ஆனால் மக்களுக்காகச் சேவை செய்யும் அரசியல் வாதிகள் தோற்கடிக்கப்படுவது அன்றிலிருந்து இன்றுவரை வளமையான விடையமாகவுள்ளது.

பகட்டு அரசியல்வாதிகளும், மற்றும் அறிக்கை அரசியல் வாதிகளும், வெற்றியீட்டும் தற்காலத்தில்தான் நாங்கள் இருந்து கொண்டிருக்கின்றோம். அமரர் நல்லையா 1956 ஆண்டு அவரது நாடாளுமன்ற வாழ்வை நிறைவு செய்தபோதுதான் இந்த நாட்டிலே எமது மக்களுக்கு, சொல்லொணாத் துயரங்கள் இன்றுவரை தொடர்ந்து கொண்டிருக்கின்றது. 

இருந்த போதிலும், அமரர் நல்லையாவின் சேவைகளை எமது மக்கள் நினைவு கூரவேண்டும், என்பதற்காக அவரது மகள் திருமதி காசிநாதன், இப்பிரதேச வறிய மாணவர்களுக்கு, புலமைச் பரிசில்களை வழங்;கி வருகிறமை மிகவும் வரவேற்கத் தக்கதாகும். இதுபோன்று ஏனைய அரசியல் வாதிகளின் பிள்ளைகளும், வறிய மாணவர்களுக்கு உதவிகளை மேற்கொண்டு வந்தால் எமது பிரதேசங்களில் வறியமாணவர்கள் என்று யாரும் இருக்க மாட்டார்கள். 

இந்த நாட்டில் நாடாளுமன்றம் ஒரு அரசியல் சபையாக மாற்றப் பட்டடிருக்கின்றது. கடந்த கலங்களில் இருந்த ஜனாதிபதிக்கு இருந்த அதிகாரங்கள் எதிர்காலத்தில் ஒளிக்கப் படவிருக்கின்றன, புதிய தேர்தல் நடைமுறைகள் வரவிருக்கின்றன, அதிகாரங்கள் பரவலாக்கப்பட்டு, ஒரு நிரந்தரமான அரசியல் தீர்வை நோக்கி நாங்கள் நகர்ந்து கொண்டிருக்கின்றோம். 

1956 களில் தமிழர்களின் பிரச்சனைகள் பூகம்பமாய் வெடித்தாலும் கடந்த காலங்களில் தமிழர்களுக்காக ஏற்பட்ட சந்தர்ப்பங்களை நாங்கள் தவற விட்டிருக்கின்றோம்.  

திம்பு பேச்சுவார்த்தை முறிவடைந்தது, இலங்கை இந்திய ஒப்பந்தம் வந்தது. அதனை நாங்கள் ஏற்றுக் கொள்ளவில்லை, ஒஸ்லோ பிரகடனம், சந்திரிக்காவுடன் ஏற்படுத்தப்பட்ட உடன்படிக்கை, ரணில் விக்கிரமசிங்கவின் காலத்தில் இருந்த சமாதான உடன்படிக்கை, இவற்றையெல்லாம் எமது அரசியல் தலைவர்களும், எமது மக்களும், அரசியல் வாதிகளும், நிராகரித்தனர். அவ்வாறு நிராகரத்ததற்கான காரணங்களும். அக்காலத்தில் இருந்தன. கடும்போக்கினால் எமக்குரிய அரசியல் தீர்வைப் பெற்றுக்கொள்ளக் கூடிய நிலமை இருந்தது. 

இவற்றுக்கு அப்பால் போராட்ட காலம், மிதவாத அரசியற் காலம், தமிழரசுக் கட்சி, தொண்டமானின் சி.டப்ளியு.சி, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் ஆகியன ஒன்றிணைந்து, தமிழர் விடுதலைக் கூட்டணி 1976 இல் எமது மக்களின் விடிவுக்காக உருவாகியது.  

பின்னர் தமிழீழ விடுதலை இயக்கம் (ரெலோ) , தமிழீழ விடுதலைப் புலிகள் (எல்.ரீ.ரீ.ஈ) , ஈ.பி.ஆர்.எல்.எவ், ஈரோஸ், ஆகிய போராட்ட இயக்கங்கள் உருவாகி சகோதர யுத்தங்கள் இடம்பெற்றன. இவற்றை எமது மக்ள் நன்கறிந்துள்ளார்கள். 

இவற்றினை உணர்ந்த பின்னர் 2001 ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆரவுடன் உருவாக்கப்பட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆயுதப் போராட்டம் மௌனிக்கப் பட்டதன் பின்பு அரசியல் தீர்வை பெறுவதற்கு இராஜ தந்திரத் ரீதியில்,  முன்நேறி செயற்படுகின்றது.

இத்தருணத்தில் தமிழ் மக்கள் மத்தியில் பிளவு ஏற்படும் வகையில் தமிழ் மக்கள் பேரவை என்ற ஒன்று உருவாகியிருக்கின்றது. இப்பேரவைக்குப் பின்னாலும் ஒரு சில அரசியல் வாதிகளும் நகரத் தொடங்கியுள்ளார்கள். 

அமரர் நல்லையாவின் காலத்தில் அபிவிருத்தியை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு எமது பிரதேசங்களை அபிவிருத்தி செய்தார்கள். பின்வந்த காலங்களில் அரசியல் ரீதியாக போராடி, அபிவிருத்தியே செய்ய முடியாத காலகட்டமாகவிருந்தது. 

தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகள் நிறைவேற வேண்டும், என்பதற்காக தமிழ் மக்கள் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும், பிரிந்து செல்லக் கூடாது, பிரிவினையும், மக்கள் மத்தியில் கூடாதொன்றாகும்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் கூறியது போன்று தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு இந்த ஆண்டு ஏற்பட வேண்டும், அதன் பிற்பாடு எமது மக்களின் அபிவிருத்திச் செயற்பாடுகள் அனைத்தும் மேலாங்கிச் செல்ல வேண்டும் என அவர் தெரிவித்தார்.





SHARE

Author: verified_user

0 Comments: