23 Jan 2016

பிரதேச போசாக்கிற்கான பன்முக செயற்பாட்டுத் திட்ட கலந்துரையாடல்

SHARE
மட்டக்களப்பு மாவட்டத்தின் கோரளைப்பற்று வடக்கு பிரதேச போசாக்கிற்கான பண்முக செயற்பாட்டுத் திட்டடத்தின் 05 ஆம் கட்ட கலந்துரையாடலானது, பிரதேச செயலாளர் செல்வி எஸ்.ஆர். ராகுலநாயகி தலைமையில் பிரதேச செயலக ஒன்று கூடல் மண்டபத்தில் வெள்ளிக்கிழமை  (22) நடைபெற்றது.
இக் கலந்துரையாடலில்  கிராம சேவகர் பிரிவு ரீதியாக போசாக்கு குறைவான 671 குடும்பங்கள் அடையாளப்படுத்தப்பட்டு உள்ளதாகவும், அக்குடும்பங்களின் போசாக்கு மட்டத்தை அதிகரிக்க அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் உத்தியோகத்தர்களை கொண்ட குழுவொன்றும் நியமிக்கப்பட்டது.

அத்துடன் 2016 ஆம் ஆண்டு பெப்பரவரி மாதம் தொடக்கம் யூலை மாதம் வரையான காலப்பகுயில் அக்குடும்பங்களுக்கான வேலைத்திட்டங்களை அமுல்படுத்துதலும் வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.

குறிக்கப்பட்ட காலப்பகுயில் போசாக்கு தொடர்பான பிர்ச்சினையை இயலுமான வரையிலும் முடிவுறுத்துவதற்கு அனைத்து உத்தியோகத்தர்களும் அர்பணிப்புடன் செயற்பட வேண்டும் என தாம் எதிர்பார்ப்பதாக இங்கு கருத்து தெரிவித்த பிரதேச செயலாளர் குறிப்பிட்டார்.

அத்தோடு பிரதேச செயலகப் பிரிவில் தொழிற்படுகின்ற அனைத்து அரச சார்பற்ற நிறுவனங்களும் தமது நிறுவனங்கள் ஊடாக வழங்கப்படுகின்ற வாழ்வாதார உதவிகள் மற்றும் ஏனைய திட்டங்கள் அனைத்தையும் தெரிவு செய்யப்பட்ட போசாக்கு மட்டம் குறைந்த குடும்பங்களுக்கு சென்றடையும் வகையில் தொழிற்பட வேண்டும் என கலந்துரையாடலில் தீர்மானிக்கபட்டது.

இக்கலந்துரையாடலில் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி, பிரதேச செயலக உதவித் திட்டமிடல் பணிப்பாளர், சுகாதார திணைக்கள உத்தியோகத்தர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், திணைக்களம் சார்ந்த உத்தியோகத்தர்கள், அரச சாரபற்ற நிறுவனங்களின் உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
SHARE

Author: verified_user

0 Comments: