(இ.சுதா)
மகிழ்ச்சியான கற்றல் செயற்பாடுகளினூடாக மாணவர்களை வழிநடத்தக் கூடிய தேவைப்பாடு இன்றைய கால கட்டத்தில் அவசியமானது. அதற்கு ஏற்ற வகையில் கல்விச் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட வேண்டும். பிள்ளைகளுக்கு ஒழுக்க விழுமியங்களை போதிக்கின்ற உயர் நிறுவனமாக பாடசாலை திகழ்வதன் மூலம் சிறந்த சமுகக் கட்டமைப்பினை உருவாக்க முடியும். என கல்லாறு மாவட்ட வைத்திய சாலையின் வைத்திய அதிகாரி கே.குகராஜா தெரிவித்தார்.
தரம் ஒன்று மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு கடந்த வியாழக்கிழமை பட்டிருப்பு கல்வி வலயத்திலுள்ள பெரிய கல்லாறு உதயபுரம் தமிழ் வித்தியாலயத்தில் நடை பெற்றது. இதில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர இவ்வாறு தெரிவித்தார்.
அவர் இதன்போது மேலும் குறிப்பிடுகையில் பாடசாலைகளில் தமது பிள்ளைகளை இணைத்துக்கொள்வதன் மூலமாக பெற்றோருக்கும் பாடசாலைக்கும் இடையில் மிக நெருக்கமான தொடர்பு ஏற்படுவதுடன் பெற்றோர் பாடசாலையின் பங்காளியாக மாற்றப்படுகின்றனர்.பிள்ளை தரம் ஒன்றில் இணைந்து கொள்வதனூடாக சமூகச் சூழலில் இருந்து பாடசாலைச் சூழலுக்கு தம்மை இயல்பாகவே மாற்றிக் கொள்கின்றனர்.பாடசாலையில் தமது பிள்ளைகளை இணைத்துக் கொள்வதுடன் தமது வேலை முடிந்து விட்டதாக பெற்றோர் நினைக்கின்றனர்.இவ்வாறான சிந்தனையினை தவிர்த்து பாடசாலை நிருவாகத்தினருடன் இணைந்து தமது குழந்தைகளின் எதிர் கால நலனுக்காக செயற்பட வேண்டும்.அப்போதுதான் எதிர் காலத்தில் சிறந்ததொரு சமூகத்தினை கட்டியெழுப்ப முடியும்.எனக்குறிப்பிட்டார்.
0 Comments:
Post a Comment