இவ்வருடம் வடக்கிக்கிழக்கில் உயர்தர பரிட்சையில் தோற்றிய மாணவர்கள் சிறந்த பெறுபேறுகளை வெளிக்காட்டியுள்ளார்கள் உண்மையிலேயே அந்த மாணவசெல்வங்களை பாராட்டாமல் இருக்கமுடியாது. இதற்காக உழைத்த பெறோர்கள், ஆசிரியர்கள்,அதிபர்கள் நிட்சயமாக போற்றப்படவேண்டியவர்கள் குறிப்பாக எமது மட்டக்களப்பு மாவட்டம் சிறந்த செயல் நிறைவாக்கத்தை வெளிக்காட்டியுள்ளது.
என முன்னாள் பிரதிமைச்சர் விநாயகமூர்தி முரளிதரன் (கருணா அம்மான்) அவரது சமூக வலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ளதர். அதில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது…
கடந்த பத்துவருடங்களாக மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தி இதுவென்பதை யாராலும் மறுக்கமுடியாது, நாங்கள் அமைச்சர்களாக இருந்த காலத்தில் பல வளங்களை கல்விக்காக செலவிட்டிருக்கின்றோம் என்னால் முடிந்தவற்றை மத்திய அரசாங்கத்தில் இருந்தும், பிள்ளையானால் முடிந்தவற்றை மாகாணசபையில் இருந்தும் பெருந்தொகையான நிதிகளை ஒதுக்கி பல மாடி கட்டிடங்கள், தளபாடங்கள், தொழில்நுட்ப வளங்கள், ஆசிரிய வளப்பற்றாகுறைகளை நிவர்த்தி செய்தல் என்றெல்லாம் பலவேலைத்திட்டங்களை செய்துகொடுத்துள்ளோம்.
அதுமாத்திரமல்ல பலபுறக்காரணிகளான பாதைகள் அமைத்தல் பல பாலங்களை அமைத்தல் குறிப்பாக மண்முனைத்துறைப்பாலம்,வறுமையொழித்தல், அனைத்துகிராமங்களுக்குமான மின்சாரதேவைகளை பூர்த்தி செய்தல் போன்ற வற்றிலும் பெரும் அபிவிருத்தி புரட்சியை ஏற்படுத்திக்காட்டியுள்ளோம்.
இந்த ஒட்டுமொத்த வேலைத்திட்டங்களின் வெளிப்பாடுதான் இந்த கல்வி வளர்ட்சியாகும். உண்மையிலேயே தமிழனின் இருப்பை எதிர்காலத்தில் தக்கவைக்க வேண்டுமானால் கல்வியிலும், பொருளாதாரத்திலையும் நாம் வளர்ட்சியடைய வேண்டும். பொதுவாக நடந்த கொடிய யுத்தம் முடிவிற்கு வராவிட்டால் இன்று பரிட்சையில் சித்தியடைந்த மாணவர்கள் அனைவரும் ஆயுதங்களை ஏந்தியவர்களா வெல்ல முடியாத யுத்தத்தில் வீணாக மடியவேண்டிய துற்பாக்கிய நிலை ஏற்பட்டிருக்கும் இப்போதாவது நான் ஏன் யுத்தத்தை விரும்பவில்லையென்பதை எமது தமிழ் சமுகம் உணர்ந்துகொள்ளவேண்டும்.
யுத்தத்தினால் வயிறுவளர்த்த ஒரு சிறு கூட்டம்தான் நம்மைபார்து துரோகிகள் என்பதும் தாங்கள்தான் போரையே நடத்தியவர்கள் போன்று வெளிநாட்டில் தப்பட்டம் அடித்துக்கொண்டும் இருக்கின்றார்கள் இவர்களால் எம் தமிழ் சமுத்திற்கு ஒரு நன்மையும் கிடைக்கப்போவதில்லை. மேற்கூறிய அபிவிருத்திகளை நாங்கள் செய்கின்ற போது ரி என் ஏ யும் விசமத்தனமான பிரச்சாரங்களை மேற்கொண்டு கொண்டு பாராளுமன்றத்தில் வெறும் வயிறுவளர்க்கும் கூட்டமாகத்தான் இருந்தார்களேவொழிய இதுவரையில் தமிழ்மக்களுக்கு ஒன்றுமே செய்யவில்லை இனியும் செய்யப்போவதுமில்லை.என அதில் குறிப்பிடப் பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment