பல தசாப்த்த காலமாக பிரையோடிப்போயுள்ள தமிழ் மக்களின் இன ரீதியான பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும் வகையிலும் எமது மக்களின் அபிலாசைகளை நிறைவேற்றும் வகையிலும் நிரந்தர தீர்வு கிடைத்து எமது உறவுகளின் வாழ்வும் வளமும் செழித்து அன்புடனும் பாசத்துடனும் வாழ இந்த தைத் திருநாள் நாளில் அனைவரும் இறைவனை பிரார்ததனை செய்வோம். என தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினருமான சீனித்தம்பி யோகேஸ்வரன் வாழ்த்துச் தைப்பொங்கல் வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.தை பிறந்தந்தால் வழி பிறக்கும் என்ற கூற்றுக்கிணங்க இந்த தைத்திருநாளில் பல காலமாய் விசாரணைகளின்றி தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை; அரசாங்கம் நல்லலெண்ண அடிப்படையில் நிபந்தனைகளின்றி விடுதலை செய்ய வேண்டும்.
நாட்டில் மலர்ந்துள்ள நல்லாடசி எம் இனத்தின் அரசியல் அபிலாசைகளை வென்றெடுக்கவும் எமது மக்கள் அனுபவிக்கும் துன்பியல்கள் எல்லாவற்றையும் தீர்க்கும் நிலையை ஏற்படுத்தும் வகையில் தற்போதைய அரசுக்கு இறைவன் விரைவான நல்லெண்ணத்தை ஏற்படுத்த வேண்டும் என நாம் இத்தைப்பொங்கல் தினத்தில் இறைவனை பிராத்திப்போம்.
உலகிற்கு உணவை உற்பத்தியாக்கி வழங்கும் உழவர் பெருமக்கள் உலக ஒளிக்கடவுளாகவும், உணவு சிறக்க உதவுபவருமாகிய கதிரவனுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் சூரிய பகவானுக்கு பொங்கலிட்டு வழிபடும் உழவர் திருநாளாக இந்நாளை கொண்டாடுகின்றனர்.
இப்பண்டிகை நாளில் உண்மையான இந்து தமிழர்கள் சைவ உணவு உண்பதுடன் பிற உயிர்களை வதைத்து அவற்றின் ஊணை உண்பதை நிறுத்த வேண்டும். ஏனெனில் இந்து என்னும் போது “ஹிம்சை”செய்யாதவர், பிற உயிர்களை நேசிப்பவர் என்ற வகையில் இந்து தர்மத்துடன் பகலவனை போற்றல் அவசியமாகும் எனத் தெரிவித்துள்ளார்.
0 Comments:
Post a Comment