19 Jan 2016

உலகில் ஒவ்வொரு பகுதியிலும் அனர்த்தங்கள் உருவாகின்ற நிலைமை அதிகரித்து வருவதை நாம் அறிவோம் - வசந்தராஜா

SHARE
உலகில் ஒவ்வொரு பகுதியிலும் அனர்த்தங்கள் உருவாகின்ற நிலைமை அதிகரித்து வருவதை நாம் அறிவோம். விசேடமாக ஆசிய நாடுகளிலேயே இந்நிலைமை அதிகரித்துள்ளது.
ஒரு நாட்டில் அனர்த்தமொன்று ஏற்பட்டால் அதனைக் கையாள வேண்டிய பொறுப்பு அந்தந்த நாட்டு அரசாங்கங்களின் பொறுப்பாகும். ஏன இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கத்தின் மட்டக்களப்பு கிளை தலைவர் த.வசந்தராஜா தெரிவித்ததார்.

இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் மட்டக்களப்பு – திருகோணமலை ஆகிய இரு கிளைகளும் ஒன்றிணைந்து அனர்த்த பதிளிரறுத்தல் குழுப்பயிற்சி நெறி இன்று
செவ்வாய் கிழமை  (19) மட்டக்களப்பு கிளைத்தலைவர் ஆர்.வசந்தராஜா தலைமையில் மட்டக்களப்பு கல்லடி  பிரிட்ச் விவ் ஹோட்டலில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இதில் திருகோணமலை மாவட்டத்தில் பிரதேச மட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட 15 பேருக்கும் மட்டக்களப்பு மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட 15 பேருக்குமான நான்கு நாள் வதிவிட பயிற்சி நெறியை ஆரம்பித்து வைத்து விட்டு கருத்து தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் குறிப்பிடுகையில்…

அரசினால் மட்டும் தனித்து நின்று ஆற்ற முடியாது. அவ்வேளைகளில் பிறருடைய உதவியும் ஆதரவும் அந்தந்த நாட்டு அரசாங்கங்களுக்கு தேவை. அந்த வகையில் ஒவ்வொரு நாட்டிலும் செயற்பட்டு வருகின்ற செஞ்சிலுவை அமைப்புக்கள் இத்தைகைய நிலைமைகளின் போது அரசு மேட்கொல்கின்ற மனிதாபிமான நடவடிக்கைகளுக்கு உதவி வருகின்றது.

செஞ்சிலுவை அமைப்புக்கள் அதற்கு ஏற்ற வகையில் தங்களை இயலுமை உள்ளவைகளாக வளர்த்துக் கொள்ள வேண்டும்.

இலங்கை செஞ்சிலுவை சங்கத்தை பொறுத்தவரையில் கிராம மட்ட அனர்த்த மதிப்பீடு குழுக்கள் பிரிவு மட்ட அனர்த்த மதிப்பீட்டு குழுக்கள் மாவட்ட மட்ட மதிப்பீட்டு குழுக்கள் தேசிய மட்ட அனர்த்த மதிப்பீடு குழுக்கள் ஆகியவற்றை உருவாக்கி அனர்த்த வேளைகளில் செயற்பட்டு வருகின்றது.

இக்குளுக்களை பலப்படுத்தும் ஒரு கட்டமாகவே இன்று இரு மாவட்டங்களுக்கான அனர்த்த பதிலீட்டு குழுக்களுக்கான பயிற்சியை ஆரம்பித்துள்ளது.
இதனூடாக தனிப்பட்ட வளர்ச்சியும் அமைப்புக்குரிய வளர்ச்சியும் உண்டு அத்துடன் அனர்த்த காலங்களில் மனித வளத் தேவையின் போது வெளி நாடுகளில் சென்று கூட செயற்பட வாய்ப்புக்கள் உண்டு எனவும் மாவட்ட கிளையின் தலைவர் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் திருகோணமலை கிளை நிறை வேற்று உத்தியோகத்தர் டாக்டர் என்.ரவிச்சந்திரன் -மட்டக்களப்பு கிளை நிறைவேற்று உத்தியோகத்தர் வி.பிரேம் குமார் -செயலாளர் எஸ்.மதிசுதன் மற்றும் தொண்டர்கள் என பலர் கலந்து கொண்டனர்.













SHARE

Author: verified_user

0 Comments: