மட்டக்களப்பில் கிழக்கு மாகாணத்திற்கான கடவுச்சீட்டு கிளைக் காரியாலயம் ஒன்று அமைக்கப்பட்ட வேண்டும் என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஷிப்லி பாறூக் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கடந்த ஆட்சியின் போது மக்களுடைய நன்மை கருதாது அரசியல் இலாபங்களை பெற்று கொள்வதற்கான நடவடிக்கைகளில் அனைவரும் செயற்பட்டிருந்தனர்.
இந்நிலையில் எதிர்பார்புக்களை ஒவ்வொன்றாக நிறைவேற்றும் வகையில் கிழக்கு மாகாணத்தில் தாங்கள் கடவுச்சீட்டுக்களை பெற்றுகொள்வதற்கான ஓர் கிளைக் காரியாலயம் ஒன்றை மட்டக்களப்பில் ஏற்படுத்தித் தருமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
உரியவர்கள் பிரத்தியேகமாக சென்று அவர்களுடைய கடவுச்சீட்டுக்களை பெற வேண்டியுள்ளமையினால் கிழக்கு மாகாண மக்கள் பாரிய அசௌகரியங்களுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்.
அத்துடன் கொழும்பு, கண்டி, வவுனியா போன்ற மூன்று இடங்களில் தற்பொழுது கடவுச்சீட்டு கிளை காரியாலயங்கள் காணப்படுகின்றன.
இதனுடன் சேர்ந்து கிளைக் காரியாலயம் ஒன்றினை கிழக்கு மாகாண மக்களுக்கு அமைத்து தருமாறு கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஷிப்லி பாறூக், ஜனாதிபதி, பிரதமர் மற்றும் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் ஆகியோர் கடிதம் மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
0 Comments:
Post a Comment