மட்டக்களப்பு மாவட்டத்தில் 14 மாற்றுத்திறனாளிகள் அமைப்பு இயங்கி வருகின்றன. அவற்றுள் 9 அமைப்புககள் சுயமாக முன்னேற்றமடைந்து பல வெலைத் திட்டங்களை மேற்கொள்ளும் அளவிற்று வளர்ந்துள்ளார்கள். அதுபோல் போரதீவுப்பற்று பிரதேசத்தில் அமைந்துள்ள
இந்த மாற்றுத்திறனாளிகள் அமைப்பும் வளர்ச்சியடைந்து பல வேலைத் திட்டங்களை முன்னெடுக்க வேண்டும். அவ்வாறு முன்னெடுக்கின்ற பட்சத்தில் பலரது பார்வையும், இவ்வமைப்பின் மீது செல்வாக்குச் செலுத்தும். இப்பிரதேசத்தில் 120 பேருக்கு அரசாங்கம் மாதாந்த உதவித் தொகையாக ஒருவருக்கு 3000 ரூபாய் வீதம், வழங்கி வருகின்றது.
என மட்டக்களப்பு மாவட்ட சமூக சேவை அதிகாரி எஸ்.அருள்மொழி தெரிவித்துள்ளார். வாழ்வாதார உதவி வழங்கும் இநிகழ்வு செவ்வாய்க் கிழமை (12) போரதீவுப் பற்று பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது. இதில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது அவர் தொடர்ந்து குறிப்பிடுகையில்…
எதிர்காலத்தில் தேர்தல்களில், போட்டியிட வேண்டும், எமது சங்கத்தின் பிரதிநிதிகளையும், வேட்பாளர்களாக நிறுத்த வேண்டும் என்ற மனோ பக்குவதிற்கு மட்டக்களப்பு மாட்ட மாற்றுத்திறனாளிகள் அமைப்பு வலுப்பெற்றுள்ளது. எனவே யாரும் யாரிடமும் கையேந்தும் நிலமை தற்போது இந்த மாட்டத்தில் இல்லை.
ஆகக்குறைந்தது ஒருவருக்கு, மாதாந்தம் 15000 ரூபாய் வருமானம் வருகின்றது. ஆனால் வீட்டில் வறுமையாகவுள்ளது. எனத் தெரிவிக்கப் படுகின்றது. மட்டக்களப்பிலுள்ள வறுமையின் பிரபுகள் யார்? எனத் தெரியாது? அனைவரும் அயராது உழைக்கின்றார்கள், சம்பாதிக்கின்றார்கள், ஆனால் கேட்டால் வறுமை என பதில் வவருகின்றது. எங்கு யார் தவறு விடுகின்றார்கள் எனத் தெரியாதுள்ளது. வறுமை தொடர்பான ஆய்வு சரியாக இடம்பெற்றுள்ளதா? என்பதுவும் கேள்வியாகத்தான் இருக்கின்றது. எனவே மட்டக்களப்பில் அதிகளவு வறுமை காணப்படுகின்றது, என்பது தொடர்பில் புதிய ஆய்வினை மேற்கொள்ள வேண்டும்.
இவற்றுக்கு மேலாக வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ளவர்கள் என அடையாளம் காணப்பட்டால், கிழக்கு மாகாண சமூகசேவைகள் திணைக்களம் அவ்வாறானவர்களுக்கு, உதவுவதற்குத் தயாராகவுள்ளது. தொழில் விருத்திகளை மேம்படுத்தல், வழிகாட்டல்களை மேற்கொள்ளல் போன்ற பல உதவிகளை முன்னெடுக்க எமது கிழக்கு மகாண சமூக சேவைகள் திணைக்களம் தயாராகவுள்ளது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment