மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று பிரதேசத்தில் பிரதேச செலாளர் கலநிதி எம்.கோபாலரெத்தினம் தலைமையில் தேற்றாத்தீவு புனித யூதா திருத்தலத்தில் தேசியக் கொடி ஏற்றப்பட்டு மரநடுகை இடம்பெற்றது. இன்போது தேற்றாத்தீவு புனித யூதா திருத்தலத்தின் குரு நிர்மல் சூசைராஜ், உதவிப் பிரதேச செயலாளர் திருமதி.சத்தியகொளரி, மற்றும், பிரதேச செயலக உத்தியோகஸ்தர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
இதேவேளை, களுதாவளை சுயம்புலிங்கப் பிள்ளையார் ஆலயத்திலும் விசேட பூஜைகள் இடம்பெற்று மரநடுகை இடம்பெற்றமை குறிப்பிடத் தக்கதாகும்.
0 Comments:
Post a Comment