27 Jan 2016

ஒரு இனத்தின் அழிவில் மற்றஇனம் வாழ நினைக்கும் கல்முனை நகர அபிவிருத்தித் திட்டத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என்கிறார் கோடிஸ்வரன் எம்.பி

SHARE
ஒரு இனத்தின் அழிவில் மற்றஇனம் வாழ நினைக்கும் கல்முனை நகர அபிவிருத்தித் திட்டத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என பாராளுமன்ற உறுப்பினர் கே.கவிந்திரன் கோடிஸ்வரன் தெரிவித்தார்.
கல்முனை தமிழ்ப்பிரிவு பிரதேச செயலகத்தின் அபிவிருத்திக் குழுக் கூட்டம் (25.01.2016) பிரதேச செயலகத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இங்கு தலைமைதாங்கி உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில், இந்தப்பிரதேச எல்லைக்குள் வாழும் தமிழ் மக்கள் விவசாயம், மீன்பிடியை நம்பி வாழ்பவர்கள். துறவந்தியமேடு கிராமம் வெள்ளநீரால் பாதிக்கப்படுகின்ற கிராமமாகும். கல்முனை நகர அபிவிருத்தித்திட்டத்தின் போது சூழல் சமநிலை பாதிக்கப்படுகின்றது. சூழலையும் மக்களையும் பாதுகாக்க வேண்டும். கல்முனை நகர அபிவிருத்தித் திட்டம் பற்றி மக்களுக்கு தெளிவுபடுத்தப்படவில்லை. இன்று நாட்டில் நல்லாட்சி நிலவுகின்றது. நல்லாட்சியில் மக்கள் விரும்பாத, ஏற்றுக்கொள்ளாத விடயத்தை அரசு அமுல்படுத்தாது என நம்புகின்றேன். மனித வளங்கள் வீணடிக்கப்படாமல் பயன்படுத்தப்பட வேண்டும்.

கல்முனை மாநகரசபை தமிழ் மக்களின் அபிவிருத்தியில் அக்கறையுடன் செயற்படுவதில்லை எனவும் குற்றம் சாட்டினார். இந்த கல்முனை தமிழ்ப்பிரிவு பிரதேச செயலகம் கல்முனை மாநகரசபை எல்லைக்குள் இல்லையா? அபிவிருத்திக் குழுக் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்தும் மாநகரசபை உத்தியோகத்தர்கள் எவரும் வரவில்லை. அபிவிருத்தி வேலைத்திட்டங்களில் தமிழ்ப்பிரிவு பிரதேச செயலகத்துடன் கல்முனை மாநகரசபை இணைந்து செயற்படாததால் பல பிரச்சினைகளை இங்கு காணக்கூடியதாக உள்ளது. இந்தப் பிரதேச செயலகம் கல்முனை மாநகரசபை எல்லைக்குள் இல்லையென நான் கருதுகின்றேன் எனக்கூறினார்.
நகர அபிவிருத்தித் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டாம் என்ற பிரேனையும் இதன்போது ஏகமானதாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.

மாகாணசபை உறுப்பினர் ரீ.கலையரசன், பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஏ.டப்ளியு. ஹப்பார் பிரதேச செயலாளர் கே.லவநாதன், மாநகரசபை உறுப்பினர்களான கு.ஏகாம்பரம், வி.கமலதாசன், சி.விஜயக்குமார், ஏ.விஜெயரெட்னம், திணைக்களத் தலைவர்கள் கிராம அபிவிருத்தி மக்கள் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.



SHARE

Author: verified_user

0 Comments: