கிழக்கு மாகாண வீதி அபிவிருத்திகத் திணைக்களத்தின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தில் இவ்வருடம் மேற்கொள்ளப் படவுள்ள வீதி அபிவிருத்திகள் தொடர்பான கலந்துரையாடல் ஒன்று புதன் கிழமை மாலை (13) கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தித் திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட அலுவலகத்தில் இடம்பெற்றது.
இதன்போது கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சினால், மட்டக்களப்பு மாவட்டத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியில், கிழக்கு மாகாண வீதி அபிவித்தி அமைச்சர் ஆரியவதி கலப்பதி மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களை அழைத்து இம்மாவட்டத்தில் எந்தெந்த வீதிகளை அபிவிருத்தி செய்ய வேண்டும் என கலந்துரையாடினார்.
கிழக்கு மாகாண வீதி அபிவித்தி அமைச்சர் ஆரியவதி கலப்பதியின் இச்செயற்பாட்டை மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த கிழக்கு மாகாணசபை உறுப்பினர்கள் மிகவும் வரவேற்பதாகவும், இவ்வமைச்சரின் செயற்பாடுகள்போல் கிழக்கு மாகாணத்திலுள்ள ஏனைய அமைச்சர்கள் குறிப்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அமைச்சர்கள் ஏனைய மாகாணசபை உறுப்பினர்களுடன் கலந்தாலேசிக்காமல் அவர்களது சுயவிருப்புடன் அபிவிருத்தி வேலைகளை முன்நெடுப்பதானது, மிகவும் கவலைக்குரிய விடையமாகும் என இதன்போது கலந்து கொண்ட கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்
கிழக்கு மாகாண வீதி அபிவித்தி அமைச்சர் ஆரியவதி கலப்பதி தமலைமையில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில் கிழக்கு மகாண விவசாய அமைச்சர் கி.துரைராசசிங்கம், பிரதித் தவிசாளர், இ.பிரசன்னா, மற்றும் மாகாண சபை உறுப்பினர்களாக கோ.கருணாகரம், மா.நடராசா, ஞா.கிருஸ்ணபிள்ளை, இரா.துரைரெத்தினம், சிப்லி பாரூக், மற்றும் கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் ஜே.ஜே.முரளீஸ்வரன், கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தித் திணைக்களப் பணிப்பாளர் எஸ்.மகிந்தன், பிரதம பொறியியலாளர் ஏ.எம்.றிஸ்வி, நிறைவேற்றுப் பொறியியலாளர் உட்பட பலர் கலந்து கொண்டிருந்தனர்.
0 Comments:
Post a Comment