18 Jan 2016

சொந்த மாவட்டங்களில் சேவைக்கு அமர்த்துமாறு வியாளேந்திரன் எம்.பியிடம் பட்டதாரி பயிலுனர்கள் மகஜர்.

SHARE
(இ.சுதா)

31.03.2012 இற்கு முன்னர்  பட்டப்படிப்பை முடித்துக் கொண்ட பட்டதாரிகளுக்கு, அரசாங்கத்தினால் 12.01.2016 அன்று கொழும்பில் வைத்து வழங்கப்பட்ட பட்டதாரி பயிலுனர் நியமனத்தில் அவர்களது, சொந்த மாவட்டத்தில் நியமனங்கள் வழங்காது வெளி மாகாணங்களில் பயிலுனர் நியமனங்கள் வழங்கப்பட்டமை குறித்து அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கும் நோக்கில் பாதிக்கப்பட்ட ஐம்பதிற்கு மேற்பட்ட பட்டதாரிப் பயிலுனர்கள் ஞாயிற்றுக்கிழமை (17) மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ச.வியாளேந்திரனை அவரது அலுவலகத்தில் சந்தித்து பிரச்சினைகளை முன்வைத்தனர்.
தாம் பயிலுனர்களாக பத்தாயிரம் கொடுப்பனவுடன் பொருளாதரர சுமைகளுக்கு மத்தியில் வெளிமாகாணங்களில் சேவையாற்றுவதனை ஏற்றுக் கொள்ள முடியாது. சுமார் நான்கு வருட காலமாக பட்டங்களை பூர்த்தி செய்த நிலையில் அரச சேவையில் இணைவதற்கு எதிர் பார்த்திருந்த நிலையில் அரசு வெளி மாகாணங்களில் பயிலுனர்களாக இணைத்துள்ளமை தம்மை வேதனைப்படுத்தியுள்ளதாகவும், இது தொடர்பாக ஜனாதிபதி, பிரதமர் மற்றும் பொது நிருவாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் கவனத்திற்கு கொண்டு வரும் நிமிர்த்தம் கோரிக்கைகள் அடங்கிய மகஜர் ஒன்றையும், இதன்போது நாடாளுமன்ற உறுப்பினரிடம் பட்டதாரிப் பயிலுனர்களட ஒப்படைத்தனர்.

மகஜரினை பெற்றுக் கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அமைச்சுடன் நேரடியாகப் பேசி துரிதமாக பட்டதாரி பயிலுனர்களை, சொந்த மாவட்டங்களில் சேவையாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கவுள்ளதாக நம்பிக்கை தெரிவித்தார்.




SHARE

Author: verified_user

0 Comments: