11 Jan 2016

என்னை லொறியால் அடித்துக்கொலை செய்யவுள்ளதாக சட்டவிரோத மண் அகழ்வில் ஈடுபடுவோர் தெரிவித்துள்ளனர் - அமல் எம்.பி (வீடியோ)

SHARE
மட்டக்களப்பு மடாவட்டத்தில் இடம்பெறும் சட்டவிரோத மண் அகழ்வை நிறுத்த வேண்டும் என நான் அண்மையில் தட்டிக்கேட்டதற்கு என்னை லொறியால் அடித்துக்கொலை செய்யவுள்ளதாக சட்டவிரோத மண் அகழ்வில் ஈடுபடுவோர் தெரிவித்துள்ளனர்.
சில அரசியல் வாதிகளின் செல்வாக்குகளினால் லொறிகள் இல்லாதவர்கள் சிலர் ஒன்றுக்கு மேற்பட்ட மண்அகழ்வு அனுமதிப் பதிரங்களை வைத்துள்ளனர். இவற்றால் லீசிங் மூலம் லொறிகளைக் கொள்வனவு செய்து தமது வாழ்வாதாரத்தினை மேற்கொள்பவர்கள் அவர்களது வாழ்வாதாரத்தினை இழந்து வருகின்றனர்.

என தமிழ் தேசியக் கூட்டமை;பபின் மட்டக்ளப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாளேந்திரன் ( அமல்)  தெரிவத்தார். 

மட்டக்களப்பு மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும், சட்டவிரேதமான மண் அழ்வு அனுமதிப் பத்திரங்கள் வழங்கப் படுவதைக் கண்டித்து இன்று திங்கட் கிழமை (11) காலை லொறி உரிமையாளர்கள் மட்டக்களப்பு கல்லடி, கல்முனை பிரதான வீதியில் ஆர்ப்பட்டத்தில் ஈடுபட்டனர். இவ்விடத்திற்கு வந்த நாடாளுமன்ற உறுப்பினர் உடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்….


மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த காலங்களிலிருந்து மண் அகழ்வு நடவடிக்கையானது முறையறற்ற வித்தில் இடம்பெற்று வந்துள்ளன. சட்டத்திற்கு முரணான முறையில் இரவு வேளைகளிலும், ஆற்றினுள் பெக்கோ இயந்திரங்களை இறைக்கி மண் அகழ்வில் ஈடுபடுகின்றனர். 

சட்டத்திற்கு முரணான முறையில் இரவு வேளைகளிலும்,  பார ஊர்திகள் திரிவதனால் பல வீதி விபத்துக்கள் இடம்பெறுகின்றன. கடந்த வருடம், பார ஊர்தியில் அடிபட்டு பாடசாலை மாணர் ஒருவர் விபத்துக்குள்ளாகி இறந்துள்ளார், வவுணதீவு பாலத்தில் பாதசாரி ஒருவரும் அடித்துக் கொல்லப்பட்டார். சட்டவிரோதமான முறையில் அவசர அவசர மாக மண் அகழ்ந்து செல்வதனால்தான் இவ்வாறான வீதி விபத்துக்கள் இடம்பெற்று வருகின்றன. 

மட்டக்களப்பு மாவட்டத்தில் சட்டவிரோத மண் அகழ்வினால் பாடசாலை மாணவர்கள், விவசாயிகள், பாதசாரிகள், உட்பட பலரும், பலத்த இன்னல்களை எதிர் கொண்டு வருகின்றனர். மண் அகழ்வுக்கு அனுமதி வழங்கும் புவிச்சரிதவியல் திணைக்களம் இதுபற்றிக் கவலைப் படுவதில்லை. எனவே ஒரு சிலரிடம் குவிந்து காணப்டுகின்ற மண் அகழ்வு அனுமதிப்பதிரங்கள், ஏனையவர்களுக்கும், பகிர்ந்தழிக்கப்பட வேண்டும். 

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரின்  தலைமையில் மாவட்டத்திலுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள், மாகாணசபை உறுப்பினர்கள், அனைவரும் ஒன்றிணைந்து குறிப்பிட்ட காலத்திற்கு எதுவித மண் அகழ்வு அனுமதிப் பத்திரங்களும், வழங்கப்படக் கூடாது என அண்மையில் முடிவெடுக்கப்பட்டது. ஆனால் அந்த முடிவுகளை மீறியும், அக்காலப் பகுதியில் அனுமதிகள் வழங்கப் பட்டுள்ளன. இவ்விடையம் குறித்து அதிகாரிகள் கண்டும் காணாததுபோல் இருக்கின்றார்கள். இது விடையமாக நாடாளு மன்றத்திலும் நான்பேசி இருகக்கின்றேன். இந்த அராஜகமான வேலைகள் உடனடியாக இடைநிறுத்தப்படல் வேண்டும். 

எமது மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள லொறி உரிமையாளர்களுக்கு மண் அகழ்வதற்கு அனுமதி வழங்கப்படாமல் வேறு மாட்டத்தைச் சேர்ந்தவர்களுக்கு, இங்கு மண் அகழ்வதற்கு அனுமதி வழங்கப் படுகின்றன. 

இவ்வியைடம் குறித்து நான் அண்மையில் தட்டிக்கேட்டதற்கு என்னை லொறியால் அடித்துக்கொலை செய்யவுள்ளதாக சட்டவிரோத மண் அகழ்வில் ஈடுபடுவோர் தெரிவித்துள்ளனர். 

ஒரு சில அதிகாரிகளின் அசமந்தப்போக்கு சூழலையும், மக்களையும், பாதிக்கின்றது. எனவே எவரையும் பாதிக்காதவாறு மண் அகழ்வு அனுமதிப் பத்திரங்களை லொறி உரிமையாளர்களுக்கு பகிர்ந்தழிக்கப் படவேண்டும். என அவர் தெரிவத்தார்.

SHARE

Author: verified_user

0 Comments: