தினமும் ஒரு குறிப்பிட்ட நேரத்தை விளையாட்டு செயற்பாடுகளில் ஈடுபடுவதற்கு ஒதுக்குவதன் மூலம் உடல் உள ஆரோக்கியத்தை பேணி வாழ முடியும் என்று திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் என்.ஏ.ஏ.புஷ்பகுமார தெரிவித்தார்.
நேற்று (25) திருகோணமலை மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற விளையாட்டு மற்றும் தேக ஆரோக்கிய மேம்பாட்டு தேசிய வார விசேட தினத்தை முன்னிட்டு இடம்பெற்ற நிகழ்வின் போது கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.அரசாங்க உத்தியோகத்தர்கள் ஒவ்வொருவரும் தங்களது வீடுகளில் தமக்கு தேவையான காய்கறிகளை உற்பத்தி செய்வதற்கான வீட்டுத்தோட்டமொன்றை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் இதன் மூலம் இரசாயன தன்மை கொண்ட உணவு வகைகளை உட்கொள்வதிலிருந்து தவிர்ந்து தேக ஆரோக்கியமுடையவர்களாக வாழ முடியுமென்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
2016 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 25 -30 ஆம் திகதி வரை விளையாட்டு மற்றும் தேக ஆரோக்கிய மேம்பாட்டு தேசிய வாரமாக அரசாங்கத்தினால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கமைய நேற்று திருமலை மாவட்ட செயலகத்தில் கடமையாற்றும் சகல உத்தியோகத்தர்களும் ஆரம்ப கட்ட உடற்பயிற்சிகளில் ஈடுபட்டார்கள்.
இவ் உடற்பயிற்சியினை மாவட்ட செயலக விளையாட்டு உத்தியோகத்தர்கள் முன்னின்று நடாத்தினார்கள். இதன் மூலம் தேக ஆரோக்கியம் ஏற்படுவதுடன் வினைதிறன் மற்றும் விளைதிறன் உடைய அரசாங்க சேவையை வழங்கக்கூடியதாக அமையும்.

0 Comments:
Post a Comment