வடக்கு கிழக்கு மக்கள் இணைந்து உருவாக்கியுள்ள தமிழ் மக்கள் பேரவை என்ற அமைப்பு காலத்தின் தேவையாகும் என மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் யோசப் பொன்னையா ஆண்டகை தெரிவித்தார்.
தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டுக் குழுவின் சார்பில் பேரவையின் இணைத்தலைவர் த.வசந்தராஜா, ஏற்பாட்டு குழு உறுப்பினர் அலன் சத்தியதாஸ், ஆகியோர் மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் யோசப் பொன்னையா ஆண்டகையை இன்று புதன்கிழமை சந்தித்து கலந்துரையாடிய போதே ஆயர் இவ்வாறு தெரிவித்தார்.
அத்துடன் தமிழ் மக்கள் பேரவைக்கு தனது ஆசிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்வதாக அவர் குறிப்பிட்டார்.
தற்காலத்தில் தமிழ் மக்கள் பேரவை என்ற அமைப்பு அவசியமானதாகும், வடக்கு கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த தமிழ் மக்கள் இணைந்து இந்த அமைப்பை உருவாக்கியமை வடக்கு கிழக்கு மாகாணங்களின் உறவினைப் பலப்படுத்தியதற்கு உதவியாக அமையும்.
எந்தவொரு சந்தர்ப்பத்திலும் வடக்கு கிழக்கு மாகாணங்கள் பிரிந்து செயற்படக் கூடாது. நாம் தனித்தனியாக இயங்கினால் அது எமது ஒற்றுமையை சீர்குலைக்கும்.
0 Comments:
Post a Comment