கிழக்கு மாகாண கல்வி அமைச்சுக்கு முன்பாக, கிழக்கு மாகாண ஆசிரிய ஆலோசகர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இவர்கள் இன்று புதன்கிழமை காலை 10.30 அளவில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
17 வலயங்களைச் சேர்ந்த சேவைக்கால ஆசிரிய ஆலோசகர்கள் தமது சேவையை நிரந்தரமாக்குமாறு கோரியே இவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருகோணமலையில் அமைந்துள்ள ஆளுனர் செயலகத்தின் முன்பாக இருந்து பேரணியாக சென்ற குறித்த ஆசிரியர்கள், கல்வி அமைச்சுக்கு முன்பாக கோசங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கடந்த 2013 ஆம் ஆண்டு உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டு தமது சேவையை நிரந்தரமாக்க வேண்டும் என தீர்ப்பு வழங்கப்பட்ட போதிலும் இதுவரை தமது சேவை நிரந்தரமாக்கப்படவில்லை என அவர்கள்தெரிவித்தனர்.
மேலும் தமது கோரிக்கைகள் அடங்கிய மகஜர் ஒன்றினை மாகாணக் கல்விப் பணிப்பாளர் M.T.A நிசாமிடம்அவர்களிடம் கையளித்துள்ளனர்.
0 Comments:
Post a Comment