21 Jan 2016

மருதமுனை மக்தப் மாணவர்களின் ஒருவருட பூர்த்தி நிகழ்வு

SHARE
(ஏ.எல்.எம்.சினாஸ்)
மருதமுனை மத்திய பள்ளிவாசல் மக்தப் மாணவர்களின் ஒரு வருட பூர்த்தியை முன்னிட்டு நடைபெற்ற மாணவர்களின் கலாசார நிகழ்வு (17.01.2016) டாக்டர்.என்.சஹூர்டீன் தலைமையில் மருதமுனை மத்திய பள்ளிவாசலில் நடைபெற்றது. நிகழ்வில் குறுனாகல் தாறு ஆயி~h அரபுக் கல்லூரி அதிபர் மௌலவி ஹஸன் றியாஸ் அப்பாஸி விசேட உரையினை நிகழ்த்தினார். அம்பாரை மாவட்ட சம்மாந்துறை கிளை மக்தப் மேற்பார்வையாளர் அல்-ஹாபில் மௌலவி பௌசுடீன் மக்தப் முக்கியத்துவம் பற்றி சிறப்புரை நிகழ்த்தினார். ஊர் முக்கியஸ்தர்கள் பலர் கலந்து கொண்ட இந்த நிகழ்வில் மாணவர்களின் கலாசார நிகழ்வுகள் அரங்கேற்றப்பட்டது.






SHARE

Author: verified_user

0 Comments: