16 Jan 2016

மிகப்பெரிய நீல மாணிக்கம் கண்டெடுப்பு

SHARE
இலங்கையின் தம்புள்ளை, எலஹெர பிரதேசத்தில் மிகப்பெரிய நீலநிற மாணிக்கக் கல் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாண்டுக்குள் இலங்கையில் கண்டெடுக்கப்பட்ட இரண்டாவது நீல மாணிக்கக்கல் இதுவாகும். இதன்  நிறை 4800 கரட் என்றும் 485 கிராம் எடை கொண்டதும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 எனினும் அதன் பெறுமதி தொடர்பான சரியான விபரங்கள் இதுவரை வௌியிடப்படவில்லை. இதற்கு முன்னர் அண்மையில் இலங்கையில் கண்டெடுக்கப்பட்ட மிகப்பெரிய நீலநிற மாணிக்கக் கல்லின் பெறுமதி 300 மில்லியன் டொலர்கள் என அதன் உரிமையாளர் அறிவித்திருந்தார்.

அந்த நீலநிற மாணிக்கக் கல்லின் நிறை 1404.49 கரட் என்பது குறிப்பிடத்தக்கது.
SHARE

Author: verified_user

0 Comments: