தேசிய விளையாட்டு விழாவில் சாதனை புரிந்த வீர வீராங்களைகளை கௌரவிக்கும் கிழக்கு மாகாண விளையாட்டு வர்ண கௌரவிப்பு விழா 2015 எதிர்வரும் 22 ஆம் திகதி வெள்ளிக்கிழமை மாலை 4.30 மணிக்கு மட்டக்களப்பு மாநகர சபை மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
மாகாண விளையாட்டுத் திணைக்களப் பணிப்பாளர் என்.மணிவண்ணன், மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர்களின் ஏற்பாட்டில், மாகாண கல்வி மற்றும் விளையாட்டு அமைச்சின் செயலாளர் ஜே.எஸ்.டி.எம்.அசங்க அபேவர்த்தனவின் ஒருங்கிணைப்பில் இவ்விழா நடைபெறுகிறது.
கிழக்கு மாகாண கல்வி மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் எஸ்.தண்டாயுதபாணி தலைமையில் நடைபெறும் இவ்விழாவில், பிரதம அதிதியாக கிழக்கு மாகாண ஆளுனர் ஒஸ்ரின் பெர்னாண்டோ, கௌரவ அதிதியாக முதலமைச்சர் நசீர் அகமட் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.
சிறப்பு அதிதிகளாக கிழக்கு மாகாணத்தின் வீதி அபிவிருத்தி அமைச்சர் ஆரியவதி கலபதி, விவசாய அமைச்சர் கி.துரைராஜசிங்கம், சுகாதார அமைச்சர் மொகமட் நசீர், மாகாண சபையின் தவிசாளர் கலபதி.கே.சந்திரதாச, பிரதித் தவிசாளர் இந்திரகுமார் நித்தியானந்தம் ஆகியோருடன், மாகாண சபை உறுப்பினர்களும், கிழக்கு மாகாண பிரதம செயலாளர் டி.எம்.எஸ். அபேகுணவர்த்தன, மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் ஆகியோரும் கலந்து கொள்கின்றனர்.
தேசிய ரீதியில் கடந்த வருடத்தில் நடைபெற்ற 41 ஆவது தேசிய விளையாட்டு விழாவில் சாதனை புரிந்த, வெற்றியீட்டிய வீர வீராங்கனைகள் இவ் வர்ண விருது வழங்கல் விழாவில் கௌரவிக்கப்படவுள்ளனர்.
0 Comments:
Post a Comment