மட்டக்களப்பு மாநகரசபை பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்ட கோட்டைப்பூங்கா, பிரின்ஸ்பாலம் ஏ.கே நடைபாதை என்பன நேற்று புதன்கிழமை திறந்து வைக்கப்பட்டன.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பிரின்ஸ் காசிநாதரின் பணிகளை பாராட்டி அவரது பெயரில் பிரின்ஸ் பாலமும், மாவட்ட அரசாங்க அதிபராக பணியாற்றிய மறைந்த ஏ.கே.பத்மநாதனின் பெயரில் ஏ.கே. நடைபாதையும் திறந்துவைக்கப்பட்டது.
மாநகர ஆணையாளர் மாணிக்கம் உதயகுமார் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் கிரிதரன், பிரதி உள்ளூராட்சி ஆணையாளர் சித்திரவேல், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பிரின்ஸ் காசினாதர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
யுத்தம் நிறைவடைந்து தற்போது அமைதியான சூழல் நிலவுவதால் உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் கோட்டை பூங்காவிற்கு அதிகளவில் வருகைதருவது குறிப்பிடத்தக்கது.
0 Comments:
Post a Comment